தேர்தலில் புதிய சாதனை: அசாமின் 14 தொகுதிகளில் 90 சதவீதம் வாக்குபதிவு

அசாம் 2-ம் கட்டத் தேர்தலில் புதிய சாதனையாக 14 தொகுதிகளில் 90 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடந்தது. முதல் கட்டத் தேர்தல் கடந்த 4-ம் தேதி நடந்து முடிந்த நிலையில், 61 தொகுதிகளுக்கு கடந்த 11-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக 84.72 சதவீத வாக்குகள் பதிவாகின.

இதில் துப்ரி மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் பெருமளவிலான மக்கள் வாக்குசாவடிக்கு வந்ததால் 91.23 சதவீத வாக்குகள் பதிவாகின. இதே போல் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ஜலேஷ்வரில் மட்டும் மிக அதிக அளவாக 93.53 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. எஞ்சிய 3 தொகுதிகளில் 90.65 சதவீதம் அளவுக்கு வாக்குகள் பதி வாகி இருப்பது தேர்தல் அதிகாரிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

இதே போல் நவ்காங் மாவட்டத் தில் உள்ள இரு தொகுதிகளிலும் 90 சதவீத வாக்குகள் பதிவாகி யுள்ளன.

முதல் கட்டத் தேர்த லில் அதிகபட்சமாக நவோபொய்சா தொகுதியில் 88.07 சதவீதமும், குறைந்தபட்சமாக சில்சாரில் 75.05 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. ஆனால் 2-ம் கட்டத் தேர்தலில் குறைந்தபட்சமே குவாஹாட்டி (கிழக்கு) தொகுதியில் 79.21 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் மற்றொரு திருப்புமுனை என்னவெனில் 68 தொகுதிகளில் ஆண்களை விட, பெண் வாக்காளர் களே அதிக அளவில் ஆர்வமுடன் வந்து வாக்குகளை செலுத்தியுள்ள னர் என்பது தான். இருகட்டங்களி லும் ஆண்களின் வாக்கு சதவீதம் 84.64 ஆகவும், பெண்களின் வாக்கு சதவீதம் 84.81 சதவீதமாகவும் அமைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE