பஞ்சாபில் அபார வெற்றியை நோக்கி ஆம் ஆத்மி; சித்து, முதல்வர் சன்னி பின் தங்கினர்

By செய்திப்பிரிவு

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் சூழல் உள்ளது. ஆளும் காங்கிரஸ் அதிக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

சண்டிகர்: பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மியும் தீவிரமாக தேர்தல் களத்தில் பணியாற்றி இருந்தது. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பலவும் ஆம் ஆத்மிக்கு சாதமாக வந்தன. அதன்படி, தனிப்பெரும்பான்மையுடன் ஆம் ஆத்மி பஞ்சாப்பில் ஆட்சியைப் பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இந்தநிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உள்ளது.

ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சன்னி ஒரு தொகுதியில் பின் தங்கியுள்ளார். அதுபோலவே மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவும் தனது தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளரிடம் பின் தங்கியுள்ளார்.

சிரோண்மணி அகாலிதளம் 3-வது இடத்திலும், பாஜக கூட்டணி 4-வது இடத்திலும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்