பெங்களூரு: தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி சதீஷ்குமார் தம்பதியினர் தங்களுக்கு பாது காப்பு வழங்குமாறு, கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
சேகர் பாபுவின் மகள் ஜெயகல்யாணி (24) திமுக மாணவர் அணி நிர்வாகியாக இருந்த சதீஷ்குமார் (26) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கடந்த 7ம் தேதி பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயகல்யாணி மனு அளித்தார்.
இந்நிலையில் ஜெயகல்யாணி தன் கணவர் சதீஷ்குமார் மற்றும் வழக்கறிஞருடன் சென்று கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவிடம் நேற்று பெங்களூருவில் மனு அளித்தார். அதில், ‘‘நானும் சதீஷ்குமாரும் கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தோம்.
சாதி கடந்த திருமணம் செய்துகொண்டதால் எங்களைப் பிரிக்க நினைக்கிறார்கள்.பெங்களூருவில் தங்கியுள்ள எங்களுக்கு கர்நாடக அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என கோரியிருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago