திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 13-ம் தேதி முதல் தெப்போற்சவம்

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ்விழா கடந்த 1468-ம் ஆண்டு முதல் அப்போதைய அரசரான சாளுவ நரசிம்ம ராயர் தொடங்கி வைத்ததாக கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அப்போது, இவ்விழாவினை தமிழில் ’திருப்பள்ளி ஓடைத்திருநாள்’ என்று அழைத்தனர். இதனை தெலுங்கில் ‘தெப்பத் திருநாள்ளு’ என அழைக்கின்றனர். இவ்விழாவினை அன்னமாச்சாரியார் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் கொண்டாடினால் நன்றாக இருக்கும் என கூறியதால், அப்போதிலிருந்து இவ்விழா கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு இந்த தெப்பத்திருவிழா, வரும் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு தினமும் இரவு 7 மணிக்கு தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நடத்தப்பட உள்ளது. முதல் நாள், சீதை சமேத  ராமர் மற்றும் லட்சுமணர், அனுமனும், 2-ம் நாள்,  கிருஷ்ணர், ருக்மணி, ராதை ஆகியோரும் 3 சுற்று உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். 3-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை 3 நாட்களுக்கு, தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 5 சுற்றுகள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். கரோனா தொற்று மிகவும் குறைந்திருக்கும் நிலையில், ஏராளமான பக்தர்கள் தெப்பத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்