பெங்களூரு: கர்நாடக மாநிலம் மேகே தாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கடந்த 2013-ம் ஆண்டு முதல்வராக இருந்த சித்தராமையா விரிவான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க ரூ.100 கோடி ஒதுக்கினார்.
இதையடுத்து மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடியில் 66 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் பெங்களூரு, மைசூரு, மண்டியா ஆகிய மாவட்டங் களின் குடிநீர் தேவைைய பூர்த்தி செய்ய கூட்டுகுடிநீர் திட்டமும், மின்சார தேவையை பூர்த்தி செய்ய நீர்மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்படும் என கர்நாடகா அறிவித்தது.
ஆனால், இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டது. மேலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர், ‘‘மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் முறையான அனுமதி பெற்று இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். தமிழகத்தின் எதிர்ப்பை மீறி மேகேதாட்டு திட்டத்தை நிறை வேற்றுவதில் அரசு உறுதியாக இருக்கிறது'' என அறிவித்தார்.
இந்த அறிவிப்பை விவசாய அமைப்பினர் வரவேற்றுள்ளனர். அதேவேளையில் தமிழக விவ சாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, மேகேதாட்டு திட் டத்தை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago