உக்ரைனில் தேசிய கொடியுடன் செல்லும் இந்திய மாணவர்கள்

By இரா.வினோத்

பெங்களூரு: கிழக்கு உக்ரைன், கார்கிவ் நகரில்படிக்கும் அமித் என்ற மாணவரின் தந்தை வெங்கடேஷ் நேற்று பெங்களூருவில் கூறியதாவது: எனது மகனும் உக்ரைன் மருத்துவக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கார்கிவ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடந்துவருவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். அங்கு பதுங்குகுழியில் இருந்து வெளியே வந்துள்ள எனது மகன் உட்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நமது தேசியக் கொடியை ஏந்தியவாறு அருகிலுள்ள ரயில் நிலையம் நோக்கி நடந்து செல்வதாக எனது மகன் தொலைபேசியில் தெரிவித்தார்.

ரஷ்ய தாக்குதலில் இருந்து தப்பிக்க இந்தியர்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தில் வேறுசில நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களும் இணைந்துள்ளனர். எனது மகனின் கல்லூரி நண்பர்கள் மட்டுமல்ல, உக்ரைனில் பணியாற்றும் இந்தியர்களும் 7 கி.மீ. தொலைவில் உள்ள ரயில் நிலையம் நோக்கி நடக்கின்றனர்.

பதுங்கு குழியில் உணவு மற்றும்தண்ணீர் இல்லாததால் உயிரை பணயம் வைத்து மாணவர்கள் அங்கிருந்து வெளியே வருகின்றனர். க‌டவுளின் மீது நம்பிக்கை வைத்து வெளியே வந்திருப்பதாக எனது மகன் தெரிவித்தார். எனது ஒரே மகன் அங்கு சிக்கியிருப்பதால் வீட்டில் ஒரு வாரமாக எங்களது நிம்மதி பறிபோய் உள்ளது. பிரதமர் மோடி உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, இந்தியர்களை காப்பாற்றி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

மேலும்