சிறப்பு விமானம் மூலம் மருந்து, நிவாரணப் பொருட்களை உக்ரைனுக்கு அனுப்பும் இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களை இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று அனுப்ப இந்திய திட்டமிட்டுள்ளது.

ஹிண்டன் விமான தளத்தில் இருந்து இந்த விமானம் இன்று புறப்படும் எனத் தெரிகிறது. அந்தப் பொருட்கள் ருமேனியா, போலந்து ஆகிய நாடுகளில் இறக்கப்பட்டு அங்கிருந்து உக்ரைனுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதைப்போலவே மேலும் சில விமானங்கள் மூலம் மருந்துகள், அத்தியாவசியப் பொருட்கள் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

முதல் விமானத்தில் 100 கூடாரங்கள், 2,500 போர்வைகள், மருந்துகள், உணவுப் பொருட்கள் அனுப்பபப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி உக்ரைனுக்கு இந்த உதவிகள் செய்யப்படவுள்ளன.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்