உக்ரைன் விவகாரத்தில் பிரதமருக்கு மம்தா ஆதரவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்க இந்தியா தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், ‘‘உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற முழு ஆதரவு அளிக்கிறோம். பிரச்சினைக்கு தீர்வுகாண நாம் தலைநிமிர்ந்து நின்றுதேசிய உறுதியுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். உக்ரைன் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும்'' என்றார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, உக்ரைனில் இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பதிவில் அவர் கூறுகையில், ‘‘இதுபோன்ற வன்முறைகளால் பாதிக்கப்படும் இந்திய மாணவர்களுக்காகவும், இந்தக்காணொளிகளைப் பார்க்கும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் என் மனம் மிகுந்த வேதனையடைகிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வரும் திட்டத்தை வெளிப்படையாக மத்திய அரசு அவர்களது குடும்பத்தினருடன் அவசரமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். சொந்த மக்களை நாம் கைவிடமுடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘‘உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்ற மத்திய அரசுக்கு போதுமான அவகாசம் இருந்தது. இந்தியர்களை மீட்பதற்கு பதிலாக புகைப்படங்கள் எடுப்பதிலும் பிரச்சாரத்திலும் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்