மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் குறைதீர்ப்பாளரை நியமிக்காத மாநிலங்களுக்கு நிதி வழங்கப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் நடைமுறைக்கு வந்தது. 100 நாள் வேலை என்றழைக்கப்படும் இந்த திட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் விதிகளின்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறை தீர்ப்பாளர் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் நியமிக்கப்படவில்லை.
குறிப்பாக குஜராத், அருணாச்சல பிரதேசம், கோவா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான்-நிகோபர் தீவுகள், லட்சத்தீவு, தாத்ரா-நாகர் ஹவேலி ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு குறை தீர்ப்பாளர் கூட இதுவரை நியமிக்கப்படாதது தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தானின் 33 மாவட் டங்களில் 4 மாவட்டங் களில் மட்டுமே குறைதீர்ப்பாளர் நிய மிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்கத் திலும் 4 மாவட்டங்களில் மட்டுமே குறை தீர்ப்பாளர்கள் உள்ளனர். பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலை நீடிக்கிறது.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் குறை தீர்ப்பு செயலியை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் குறை தீர்ப்பாளரின் செயல்பாட்டை எளிதில் கண்காணிக்க முடியும். செயலி அறிமுக விழாவில் பேசிய அமைச்சர் கிரிராஜ் சிங், பல்வேறு மாநிலங்களில் குறை தீர்ப்பாளர் நியமிக்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து திட்டத்தின் செயலாளர் நாகேந்திர நாத் சின்ஹா, செய்தியாளர் களிடம் கூறும்போது, "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குறை தீர்ப்பாளரை கண்டிப்பாக நியமிக்க வேண்டும். ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத மாவட்டங்களில் குறை தீர்ப் பாளர்கள் நியமிக்கப் படவில்லை என்றால் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப் படாது. அடுத்த நிதி யாண்டு முதல் இந்த புதிய கட்டுப் பாடு அமலுக்கு வரும்" என்று தெரிவித்தார்.- பிடிஐ
முக்கிய செய்திகள்
இந்தியா
45 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago