வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்போர் குடும்பத்துக்கு இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்வு: வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது

By செய்திப்பிரிவு

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வாகன விபத்தில் சிக்கு வோருக்கு இழப்பீடு வழங்கு வதற்காக கடந்த 1989-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த பிப்ரவரி 25-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, வாகன விபத்தில் உயிரிழப் போரின் குடும்பத்தினருக்கான இழப் பீடு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப் படுகிறது. இதுபோல காயமடைந் தோருக்கான நிவாரணத் தொகை ரூ.12,500-லிருந்து ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்படுகிறது. இது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இது தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து உரிய இழப்பீட்டை வழங்குவதற்கான காலவரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2020-ல் நாடு முழுவதும் 3 லட்சத்து 66 ஆயிரத்து 138 சாலை விபத்துகள் ஏற்பட்டதாகவும் இதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 714 பேர் உயிரிழந்ததாகவும் அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்