உ.பி.யில் இன்று 5-ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்: முக்கியத்துவம் பெற்றுள்ள மூன்று தொகுதிகள்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி10-ல் தொடங்கிய சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 4 கட்டவாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. 5-ம் கட்ட வாக்குப் பதிவுஇன்று நடைபெறுகிறது.

மொத்தம் 685 பேர் போட்டியிடும்5-ம் கட்ட தேர்தலில் முதல்முறையாக அதிக எண்ணிக்கையில் 90 பெண்கள் களத்தில் உள்ளனர்.

12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் 3 தொகுதிகள் முக்கியத்துவம் பெருகின்றன. இதில் அயோத்தி, பாஜகவுக்கு சவாலுக்குரியதாக உள்ளது. ஏனெனில், இங்குள்ள சர்ச்சைக் குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதாக ஒவ்வொரு தேர்தலிலும் பாஜக வாக்குறுதி அளித்தது.

1991 முதல் பாஜக தொடர்ந்து வென்றும் வந்தது. 2012-ல் ஒருமுறை மட்டும் அயோத்தி தொகுதியில் சமாஜ்வாதி வென்றது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணி 2024-ல்நிறைவடைய உள்ளது.

இப்பணிகள் மீதான நிலப் புகார்கள் உள்ளிட்டவற்றை சமாஜ்வாதி தனது பிரச்சாரத்தில் முன்னிறுத்துகிறது. இதை சமாளித்து அயோத்தி தொகுதியை தக்கவைக்க பாஜக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டது.

காங்கிரஸுக்கு செல்வாக்கு மிகுந்த தொகுதிகளாக ராய்பரேலி, அமேதி கருதப்படுகிறது. அமேதி யில் 1993 முதல் சஞ்சய்சிங் வென்று வந்தார். அமேதியை இவரிடமிருந்து கடந்த தேர்தலில் பாஜக பறித்தது. இந்த முறையும் பாஜக வேட்பாளராகி விட்ட கரீமா சிங்கிற்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் பிரச்சாரம் செய்தனர். உ.பி.யில் தீவிரம் காட்டிவரும் பிரியங்கா வதேராவுடன் முதல்முறையாக ராகுல் காந்தியும் அமேதியில் பிரச்சாரம் செய்தார். அமேதியில் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்த தெகுதி எம்.பியும் மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி, “நான் ஒரு பெண், என்னாலும் போட்டியில் வெல்ல முடியும் என்ற கோஷத்தை அறிமுகப்படுத்திய பிரியங்கா காந்தி ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார். ஸ்மிருதி, கடந்த மக்களவைத் தேர்தலில் இங்கு ராகுல் காந்தியை வென்று எம்.பி.யானவர் ஆவார்.

கடந்த 1993 முதல் சுயேச்சை எம்எல்ஏவாக இருக்கும் ராஜா பய்யா எனும் ரகுராஜ் பிரதாப் சிங்கால், முக்கியத் தொகுதியாகி விட்டது பிரதாப்கர். இவர் இந்தமுறை ஜன்சத்தா தளம் (லோக்தாந்திரிக்) எனும் கட்சி தொடங்கி, அதன் சார்பில் போட்டி யிடுகிறார்.

குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதியான இவரை பிரதாப்கரில் எதிர்க்கும் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் வேட்பாளர்களில் இது வரை எவரும் வென்றதில்லை. இவரை தோற்கடிக்க என பிரதாப் கரில் முதல்முறையாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்சிங் யாதவ் பிரச்சாரம் செய்துள்ளார். சமாஜ் வாதி, பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் ஆட்சிகளில் அமைச்சராகவும் இருந்தவர் ராஜா பய்யா.

உ.பி.யில் மார்ச் 3-ல் ஆறாம் கட்ட தேர்தலும் மார்ச் 7-ல் இறுதிக்கட்ட தேர்தலும் முடிந்த பின்னர், மார்ச் 10-ல் முடிவுகள் வெளியாக உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE