ஹிஜாப் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு: சிஎப்ஐ மீது வழக்கு பதிவு

By இரா.வினோத்

பெங்களூரு: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக உடுப்பி முஸ்லிம் மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் அடங்கிய அமர்வு 11 நாட்கள் தொடர்ச்சியாக‌ விசாரித்தது.

மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் தேவதத் காமத், ரவிவர்ம குமார் ஆகியோரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பிரபுலிங் நவத்கியும் வாதிட்டனர். இதையடுத்து உடுப்பிபி.யு. கல்லூரி சார்பில் மூத்தவழக்கறிஞர் எஸ்.எஸ்.நாகனந்த்வாதிட்டார். அவர் வாதிடும்போது, இந்த போராட்டத்தின் பின்னணியில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா (சிஎப்ஐ) அமைப்பினர் இருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஷ்தி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நேற்றுவிசாரணைக்கு வந்த போது அரசு தலைமை வழக்கறி ஞர் பிரபுலிங் நவத்கி,சிஎப்ஐ குறித்த ரகசிய அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் தாக்கல் செய்தார். இதையடுத்து தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி கூறும்போது, ‘‘இவ்வழக்கில் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் நீதிமன்றம் கேட்டுள்ளது. வேறு அமைப்பினர் இவ்வழக்கில் இணைய விரும்பினால், எழுத்துப்பூர்வமாக தங்களது வாதத்தை விரைவாக தாக்கல் செய்யலாம். வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைக்கிறோம்''என்று உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE