ரஷ்ய தாக்குதலால் உக்ரைனில் நெருக்கடி: கீவ் நகரில் இருந்து தப்பி போலந்து வந்த இந்தியர்கள்

புதுடெல்லி: ஹைதராபாத்தை சேர்ந்த ராகேஷ் வெடகிரே (33) என்பவர் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பிஸினஸ் அனலிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

அங்கிருந்து தப்பியது குறித்து ராகேஷ் கூறியதாவது: கீவ் நகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என்பதை அறிந்து கையில் கிடைத்த உடைகள், ஆவணங்கள் மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு நானும் எனது நண்பர்களும் 4 கார்களில், போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகரை நோக்கிப் புறப்பட்டோம்.

நாங்கள் புறப்பட்டு 3 மணி நேரத்துக்குப் பிறகு, கீவ் நகரிலேயே இருக்கும்படி இந்தியத் தூதகரத்தில் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை தகவல் வந்தது. அப்போது கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்தோம்.

அதனால் செய்வதறியாது திகைத்தோம். லிவிவ் நகர் மீதான புதிய தாக்குதல் போன்ற காரணங்களால் நாங்கள் லிவிவ் வந்துசேர 11 மணி நேரத்துக்கு மேல் ஆனது.

பிறகு லிவவ் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை போலந்து வந்து சேர்ந்த நாங்கள் இங்கு டிரான்சிஸ்ட் விசாவுக்காக காத்திருக்கிறோம்.

இவ்வாறு ராகேஷ் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE