புதுடெல்லி: திறன் மேம்பாடு மற்றும் தொழிற்சாலைகளுடனான பிணைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய பட்ஜெட் சிறப்பு கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் 2022, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையில் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வ விளைவுகள் குறித்த இணைய வழி கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
சம்பந்தப்பட்ட துறைகளின் மத்திய அமைச்சர்கள், கல்வி, திறன் மேம்பாடு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சித் துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர்.
பட்ஜெட்டுக்கு முன்பும், பிறகும் சம்பந்தப்பட்ட துறையினருடன் ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற புதிய நடைமுறைப்படி இந்த இணைய வழிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. பிரதமர் தமது உரையில் கூறியதாவது:
» சஹா 'ஓய்வு' உரையாடலில் நடந்தது என்ன? - ராகுல் டிராவிட் விளக்கம்
» 50,000 இடங்களில் 23-வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தேச நிர்மாணப் பணிகளில் இளைய தலைமுறையின் முக்கியத்துவம் தேவையானது. வருங்காலத்தில் தேசத்தை கட்டமைக்கக்கூடிய நமது இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பது, இந்தியாவின் எதிர்காலத்திற்கு அதிகாரமளிக்கும்.
2022 பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள ஐந்து அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, தரமான கல்வியை உலகமயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய முடிவுகள், அதாவது, கல்வித் துறையில், மேம்படுத்தப்பட்ட தரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட திறமைகளுடன் கல்வியை விரிவுபடுத்துவது.
இரண்டாவதாக திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துதல் ஆகும். டிஜிட்டல் திறன் சூழலை உருவாக்குதல், தொழிற்சாலைகளின் தேவைகளுக்கு ஏற்ற முறையில் திறன் மேம்பாடு மற்றும் தொழிற்சாலைகளுடனான பிணைப்பை மேம்படுத்துவதற்கு சிறப்பு கவனம் செலுத்துதல். மூன்றாவதாக, இந்தியாவின் பண்டைக்கால அனுபவம் மற்றும் நகர்ப்புற திட்டமிடல் மற்றும் கல்விக்கான வடிவமைப்பை உள்ளடக்கியதாக மாற்றுவது முக்கியமானது.
நான்காவதாக உலகமயமாக்கல் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்களின் வருகை மற்றும் கிப்ட் சிட்டியில் நிதி தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங்களை ஊக்குவித்தல் ஆகும். ஐந்தாவதாக, அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் மற்றும் சர்வதேச சந்தையில் பெரும் வாய்ப்புகள் காணப்படும் அனிமேஷன் காட்சி விளைவுகள் விளையாட்டு நகைச்சுவையில் சிறப்பு கவனம் செலுத்துதல் ஆகும்.
இந்த பட்ஜெட் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கத்தை அடைய பேருதவி புரியும். பெருந்தொற்றுக் காலத்திலும் நாட்டின் கல்விமுறை தொடர்ந்து செயல்பட வழிவகுத்தது டிஜிட்டல் இணைப்புதான். இந்தியாவில் டிஜிட்டல் பாகுபாடு குறைந்து வருகிறது. புதுமைக் கண்டுபிடிப்பு நம்நாட்டில் உள்ளார்ந்த சேவைகளை உறுதி செய்யும். மேலும் முன்னோக்கிச் செல்வது பற்றி கூறுவதென்றால், நாடு ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்கிறது.
இ-வித்யா, ஒரு வகுப்பு ஒரு அலைவரிசை டிஜிட்டல் ஆய்வகங்கள், டிஜிட்டல் பல்கலைக் கழகங்களை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள், நாட்டின் இளைஞர்களுக்கு உதவும் விதமாக கல்வி சார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்துவது அவசியம்.
கிராமங்கள், ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நாட்டின் சமூக-பொருளாதார நடைமுறை குறித்த மேம்பட்ட கல்வி முறையை வழங்குவதற்கான முயற்சி இது. அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பல்கலைக் கழகம், பல்கலைக் கழகங்களில் பயில இடம் கிடைக்காததால் ஏற்படும் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காணக்கூடிய, இதுவரை மேற்கொள்ளப்படாத புதுமையான நடவடிக்கையாகும்.
கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் மற்றும் டிஜிட்டல் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய அனைத்துத் துறையினரும் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் விரைந்து பணியாற்ற வேண்டும். புதிய கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தும் போது சர்வதேச தரத்தை மனதில் கொள்வது அவசியம்.
இன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. தாய்மொழியில் கற்பிக்கப்படும் கல்விக்கும் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும் இடையிலான பிணைப்புகளை குறிப்பிட விரும்புகிறேன். பல்வேறு மாநிலங்களில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, உள்ளூர் மொழிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்த அம்சங்கள் இணையதளம், செல்போன்கள், தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாகவும் கிடைக்கச் செய்ய வேண்டியதன் அவசியம் உள்ளது. சைகை மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் தேவை உள்ளது.
தற்சார்பு இந்தியாவுக்கான உலகளாவிய திறன் தேவையை கருத்தில் கொண்டு, ஆற்றல் வாய்ந்த திறன் பயிற்சி அளிப்பது அவசியம். மாறிவரும் பணிச்சூழலின் தேவைக்கேற்ப நாட்டின் ‘மக்கள் தொகை விகிதாச்சாரத்தை’ தயாரிப்பதன் அவசியம் உள்ளது. இதனை மனதில் கொண்டுதான் பட்ஜெட்டில், திறன் பயிற்சி மற்றும் வாழ்வாதாரத்திற்கான டிஜிட்டல் சூழல் மற்றும் மின்னணு திறன் ஆய்வகங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
நிறைவாக, பட்ஜெட் நடைமுறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், பட்ஜெட்டை எவ்வாறு மாற்றத்திற்கான சாதனமாக ஆக்கியுள்ளது. பட்ஜெட் அறிவிப்புகளை எவ்வித தடங்கலும் இன்றி களத்தில் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். சமீபகாலத்தில் பட்ஜெட் தாக்கலை ஒருமாதத்திற்கு முன்பே மேற்கொள்வதன் மூலம், ஏப்ரல் மாதத்தில் அதனை நடைமுறைப்படுத்த தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் ஏற்கனவே மேற்கொள்வதை உறுதி செய்கிறது.
பட்ஜெட் ஒதுக்கீடுகள் அதிக பயனளிப்பதை உறுதி செய்ய வேண்டும். சுதந்திர பெருவிழா மற்றும் தேசிய கல்வி அடிப்படையில், இது முதலாவது பட்ஜெட், பொற்காலத்திற்கு அடித்தளமிட இதனை விரைவாக செயல்படுத்த நாங்கள் விரும்புகிறோம். பட்ஜெட் என்பது வெறும் புள்ளியியல் கணக்கு மட்டுமல்ல, பட்ஜெட், முறையாக அமல்படுத்தப்படுமானால், குறைந்த வளங்களை கொண்டே பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago