டெல்லி பெண் கொடுத்த புகாரில் கைதான ஒடிசா நபர்: 27 பெண்களை திருமணம் செய்தது அம்பலம்

By செய்திப்பிரிவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் கைதான காதல் மன்னன் 27 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் ஸ்வெயின். 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட இவர் படித்தது 10-ம் வகுப்பு வரை மட்டுமே. 66 வயதாகும் இவர் சிறு வயது முதலே பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மே மாதம் டெல்லியிலிருந்து புவனேஸ்வர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்ட ஒரு பெண், தனது கணவர் குறித்து ஒரு புகார் கொடுத்தார். தன்னுடைய கணவர் பல பெண்களை ஏமாற்றி பணத்தை ஏமாற்றியுள்ளார் என்றும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ரமேஷ் குமாரை கைது செய்தனர். அப்போது இவர் 14 பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.

இந்நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மொத்தம் 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்திய ஒடிசா மாநில உதவி போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் சத்பதி கூறும்போது, “ரமேஷ் குமார் ஒரு விலாசத்தில் நீண்ட நாட்கள் தங்கி இருப்பது இல்லை. தன்னுடைய இடத்தை அடிக்கடி அவர் மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். அவர் இதுவரை 27 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளது விசாரணாயில் தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்