தீவிரவாதிகள் மீதான வழக்குகள் சமாஜ்வாதி ஆட்சியில் திரும்ப பெறப்பட்டன: உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சியில் இருந்தபோது தீவிரவாதிகள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட்டன என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் 3-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த பின்னணியில் ஹர்தோய், உன்னாவ் பகுதி களில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

சமாஜ்வாதி, காங்கிரஸ் தலைவர்களின் செயல்பாடு அதிர்ச்சிஅளிக்கிறது. ஒசாமா பின்லேடன் போன்ற தீவிரவாதிகளுக்கு அவர்கள் மரியாதை செலுத்துகின்றனர், புகழாரம் சூட்டுகின்றனர். உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி ஆட்சியின்போது சுமார் 14 தீவிரவாத தாக்குதல் வழக்குகளில் தொடர்புடைய தீவிரவாதிகள் மீதானவழக்குகள் திரும்ப பெறப்பட்டன.தீவிரவாதிகள் மீது அனுதாபம் கொண்ட கட்சிகள், நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கு கின்றன.

நான் குஜராத் முதல்வராக இருந்தபோது அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப் பட்டது. அந்தத் தாக்குதலில் தொடர்புடையவர்களை பாஜக அரசு தப்பவிடவில்லை. அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

நான் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதி எம்.பி.யாக உள்ளேன். ஆனால் கடந்த 2014 முதல்2017 வரை உத்தர பிரதேச மக்களின்வளர்ச்சிக்காக பணியாற்ற அப்போதைய ஆட்சியாளர்கள் (சமாஜ்வாதி) அனுமதிக்கவில்லை.

வாரிசு அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது தங்கள் குடும்பத்தின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தினர். கடந்த 2017-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்தது. அதன்பிறகு இரட்டை இன்ஜின் அரசால் மாநிலம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்தது. ஹர்தோய் பகுதியில் மட்டும் சுமார் 70,000 பேருக்கு முதல்வர் யோகி ஆதித்ய நாத் அரசு வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. சமாஜ்வாதியின் 5 ஆண்டுகால ஆட்சியில் 34,000 கழிப்பறைகள் மட்டுமே கட்டப்பட்டன. பாஜக ஆட்சியில் 5 லட்சம் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

பாஜக அரசால் செயல்படுத்தப் படும் நலத்திட்டங்களால் மாநில மக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். வரும் மார்ச்10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை யின்போது பாஜக அமோக வெற்றிபெறும். அந்த வெற்றியை மக்கள்ஹோலி பண்டிகையாக கொண்டாடுவார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE