அகிலேஷ் யாதவ் நவீன கால அவுரங்கசீப் - சிவராஜ் சிங் சௌஹான் தாக்கு

By செய்திப்பிரிவு

லக்னோ: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வை நவீன கால அவுரங்கசீப் என்று விமர்சித்துள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 10, 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் 3-ம் கட்டமாக இன்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.16 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்காக 25,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. மூன்றாம் கட்ட தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் கர்ஹால் தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடந்தது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் எஸ்.பி.சிங் பாகேல் போட்டியிடுகிறார். இதன்காரணமாக இந்த தொகுதி மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

இந்நிலையில் இன்று உத்தர பிரதேசத்தின் தியோரியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பங்கேற்ற மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், அகிலேஷ் யாதவ்வை தாக்கி பேசினார். அதில், "அகிலேஷ் யாதவ் இன்றைய நவீனகால அவுரங்கசீப். தந்தைக்கு விசுவாசமாக இல்லாதவர், உங்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார். அவுரங்கசீப் தனது தந்தையை சிறையில் அடைத்தார், தனது சகோதரர்களை கொன்றார். அதேதான் அகிலேஷும் செய்கிறார். அகிலேஷ் செய்தது போல் தன்னை யாரும் அவமானப்படுத்தவில்லை என்று முலாயம் சிங்கே வருத்தப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்கள் அகிலேஷ் யாதவ்வை அவுரங்கசீப் உடன் ஒப்பிடுவது இது முதல்முறை கிடையாது. 2019 மக்களவைத் தேர்தலின் போது, ​​உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ்வை அவுரங்கசீப் உடன் ஒப்பிட்டு பேசினார். மூன்று ஆண்டுகளுக்கு யோகி செய்த டுவீட் செய்து அவரை விமர்சித்தார். 2016 ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியின் கட்டுப்பாட்டில் அகிலேஷ் தனது சித்தப்பா ஷிவ்பால் யாதவுடன் கடுமையான மோதலில் ஈடுபட்டபோது, ​​அவுரங்கசீப் ஒப்பீடு செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்