மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஓட்டல்களில் நடன நிகழ்ச்சி களுக்கு அனுமதி வழங்கும் விவ காரத்தில் அம்மாநில அரசு நடந்து கொள்ளும் விதம் குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்கள் பிச்சை எடுப்பதைவிட ஓட்டல்களில் நடனம் ஆடுவதில் தவறில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநில அரசு கடந்த 12-ம் தேதி புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அதன் படி, பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்களுக்கு ஒரு கிமீ தொலை வில் நடன பார்கள் இருக்க கூடாது, ஆபாச நடனம் இடம்பெறாமல் தடுக்க வேண்டியது ஓட்டல் உரிமையாளர்களின் பொறுப்பு, மீறினால் 5 ஆண்டு சிறை, ரூ.25000 அபராதம், நடனமாடும் பெண் களை தொட்டால் 6 மாதம் சிறை, மதுபானங்கள் பரிமாறக் கூடாது, மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை மட்டுமே அனுமதி என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகள் கடுமை யாக இருப்பதாகவும், ஏற்கனவே உரிமம் கோரி விண்ணப்பித்த ஓட்டல்களுக்கு உரிமம் வழங்கப் படவில்லை என்று ஓட்டல் உரிமை யாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத் தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சிவ கீர்த்தி சிங் அடங்கிய அமர்வு, மகாராஷ்டிர மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. ‘நடனம் என்பது அங்கீ கரிக்கப்பட்ட தொழில். அதில் ஆபாசம் இருந்தால் அது சட்ட அங்கீகாரத்தை இழக்கும். பெண்கள் தெருவில் பிச்சை எடுப் பதற்கும், தவறான செயல்களில் ஈடுபடுவதற்கும் மாற்றாக கவுரவ மாக ஓட்டல்களில் நடனமாடுவதில் தவறில்லை.
ஆனால், மகாராஷ்டிர அரசு விதித்துள்ள நிபந்தனைகள் ஒட்டுமொத்தமாக நடன நிகழ்ச்சி களுக்கே தடை விதிக்கும் வகை யில் உள்ளது.
நடன பார்களுக்கு உரிமம் வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியதற் கான அறிக்கையை அடுத்த விசா ரணையின்போது மகாராஷ்டிர அரசு சமர்ப்பிக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago