சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.
பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி இந்த முறை ஆட்சி அமைக்க முயல்கிறது.
பாஜக ஆதரவில் பஞ்சாபில் ஆட்சி செய்த சிரோமணி அகாலி தளம், 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்கள் பிரச்சினையில் பிரிந்தது. தற்போது சிரோமணி அகாலி தளம் தனித்து போட்டியிடுகிறது. ஏற்கெனவே, அம்ரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி பாஜக.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
இந்தக் கூட்டணியால் பஞ்சாபின் 117 தொகுதிகளில் மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ‘நவி சோச் நவா பஞ்சாப்’ என்ற பெயரில் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்தநிலையில் பஞ்சாபின் பதேகர் சாஹிப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ஒப்புக் கொள்ளாததால் தான் அவர் நீக்கப்பட்டார். மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுடன் தனக்கு ஒப்பந்தம் உள்ளதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று நான் தொடர்ந்து கூறினேன். நான் இதை மீண்டும் சொல்கிறேன், பஞ்சாப் பரிசோதனை செய்ய வேண்டிய மாநிலம் அல்ல. போதைப்பொருள் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டால் பஞ்சாபில் வளர்ச்சியும் வளர்ச்சியும் அர்த்தமற்றதாகிவிடும்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago