புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று 27,409 என்றளவில் அன்றாட கரோனா தொற்று பதிவாகியிருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இது சற்றே அதிகரித்து மீண்டும் 30,000ஐ கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேர நிலவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது:
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,615 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் நேற்று மீண்டும் தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்தது. நேற்று புதிதாக 756 பேருக்கு தொற்று உறுதியானது.
* அன்றாட பரவல் (பாசிடிவிட்டி) விகிதம் 2.45% என்றளவில் உள்ளது. வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 3.32%. .
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,615 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,27,23,558.
* கடந்த 24 மணி நேரத்தில் 82,988 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,18,43,446.
* கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,09,872.
* இதுவரை நாடு முழுவதும் 174 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 7 மணியளவில் இந்தத் தகவலை அரசு வெளியிட்டது.
» விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட நடிகர் தீப் சிங் சித்து உயிரிழப்பு
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அமல்: தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமலாகிறது. குறிப்பாக, பொது நிகழ்ச்சிகள், திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மட்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று முதல் நர்சரி பள்ளி திறக்கப்பட்டன. திரையரங்குகளில் இன்று முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சோப்பு அல்லது சானிடைசர்கள் பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுதல், கடைகளில் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago