குடும்ப அரசியல் குறித்த பிரதமரின் கருத்துக்கு நிதிஷ் குமார் பாராட்டு

By செய்திப்பிரிவு

பாட்னா: பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் அளித்த பேட்டி ஒன்றில், அரசியல் கட்சிகளில் தலைவர்களின் குடும்பங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவதை விமர்சித்தார். குறிப்பாக உத்தரபிரதேத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை அவர் விமர்சித்தார்.

அப்போது அவர், “மறைந்த தலைவர்கள் ராம் மனோகர் லோகியா, ஜார்ஜ் பெர்னாண்டஸ் வழியில் எங்கள் கூட்டாளி நிதிஷ் குமாரும் குடும்ப அரசியல் மோகத்திற்கு அடிபணியாமல் சமாஜ்வாதியாக (சமூக வாதியாக) தனித்து நிற்கிறார். குடும்ப அரசியல் போக்கை முறியடித்தவர்களில் பிரகாசமான எடுத்துக்காட்டாக நிதிஷ்குமார் திகழ்கிறார்” என்றார்.

இது தொடர்பாக முதல்வர் நிதிஷ்குமார் நேற்று கூறும்போது, “பிரதமர் கூறியது மிகவும் சரியானது மற்றும் துல்லியமானது ஆகும். அர்ப்பணிப்புள்ள அரசியல் தொண்டர்களின் உழைப்பில் ஒருவர் தனது சொந்த குடும்பத்தை மேம்படுத்துவது சோசலிசம் அல்ல. உங்கள் கடின உழைப்பால் எதையாவது அடைந்துவிட்டீர்கள் என்றால் அது நல்லது. ஆனால் கட்சியில் உங்கள் இடத்தில் உங்கள் மனைவியை நியமிப்பது, பிறகு உங்கள் மகனை மேம்படுத்துவது ஆபத்தான போக்கு. இந்த விஷயம் குறித்து பிரதமர் பேசியது அவரது கருணையை காட்டுகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்