சென்னை - பெங்களூரு உள்ளிட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு: ரயில்வே அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சென்னை - பெங்களூரு புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு நடப்பதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது:

சென்னை-பெங்களூரு- மைசூரு, டெல்லி-வாரணாசி, மும்பை - நாக்பூர், மும்பை - ஐதராபாத் உள்பட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள ரயில்வே தீர்மானித்துள்ளது.

டெல்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், தில்லி-அகமதாபாத், மும்பை- ஐதராபாத், சென்னை-பெங்களூரு- மைசூரு, வாரணாசி-ஹவுரா, தில்லி- அமிர்தசரஸ் ஆகிய வழித்தடங்களில் புல்லட் ரயில்களை இயக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 8 வழித்தடங்களில் எந்த ஒரு திட்டத்திற்கும் இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை.

இவ்வாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

ஏற்கெனவே தொடங்கிய மும்பை- அகமதாபாத் அதி வேக ரயில் தட திட்டத்தின் கட்டமைப்புப் பணிகளே இன்னும் நிறைவு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்