போதை பொருளுடன் வந்த பாக். ட்ரோனை விரட்டியடித்தது எல்லை பாதுகாப்புப் படை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லையில் குர்தாஸ்பூர் செக்டாரின் பஞ்ச்கிரைன் பகுதியில் நேற்று இரவு ஒரு மணி அளவில் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் ஒன்று பறந்து வந்தது. இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய பகுதிக்கு சத்தத்துடன் ட்ரோன் பறந்து வருவதைப் பார்த்த எல்லை பாதுகாப்பு படையினர் ட்ரோனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். காகர் மற்றும் சிங்கோக் கிராமங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகத்திற்கிடமான மஞ்சள் நிற பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த பாக்கெட்டுகளை ட்ரோன் வீசிச் சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த பாக்கெட்டில் கைத்துப்பாக்கி ஒன்றும் சுற்றப்பட்டு இருந்தது. இது எல்லையில் இருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வயலில் கண்டுபிடிக்கப்பட்டது’’ என்றார். ட்ரோன் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தப்பட்டது முறியடிக்கப்பட்டது. ட்ரோன் பாகிஸ்தான் பகுதிக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்