ஹைதராபாத்: ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட 216 அடி உயர ராமானுஜரின் சமத்துவ சிலையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஹைதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வைணவ ஆச்சாரியாரான ராமானுஜருக்கு 216 அடி உயர சிலைஅமைக்கப்பட்டுள்ளது. இதற்குசமத்துவ சிலை என பெயரிடப் பட்டுள்ளது. ராமானுஜரின் 1000 ஆண்டுகள் பூர்த்தி ஆனதன் நினைவாக ரூ.1,200 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆஸ்ரமவளாகத்தில் மிகவும் பிரம் மாண்டமான முறையில் சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து இச்சிலையையும், இங்கு கட்டப்பட்டுள்ள 108 திவ்ய தேச வைணவ கோயில்களையும் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராம்நகருக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் மட்டும் சுமார் 2 லட்சத் துக்கும் அதிகமான பக்தர்கள் ராமானுஜரை தரிசித்துள்ளதாக ஆஸ்ரம வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஹைதராபாத் ராம்நகரில் நிறுவப்பட்ட ராமானுஜரின் 216 அடி உயர சிலையை நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். அப்போது அவரை சின்ன ஜீயர் சுவாமிகள் வரவேற்றார். அப்போது அவர் 108 திவ்ய தேச கோயில்களை தரிசித்தார். அப்போது அவர் பேசும்போது, "ராமானுஜரின் சமத்துவ கொள்கையை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும். 1000 ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்த அவர்இன்றும் நிலைத்து நிற்கிறார் என்றால் அவரது ஞான மார்க்கமும்,உயர்ந்த கொள்கைகளுமே காரணம். ராமானுஜரை போன்று உயர்ந்த கொள்கைகளுடன் வாழ்ந்தால் ஆயிரம் ஆண்டுகளுக்குபின்னரும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கலாம் என்பதற்கு சமத்துவ சிலை ஒரு சிறந்த உதாரணம்" என்றார்.
33 சிலைகள் பிரதிஷ்டை
சமத்துவ சிலை அமைந்துள்ள ராம் நகர் ஆஸ்ரமத்தில் கட்டப்பட்டுள்ள 108 வைணவ திவ்ய தேச கோயில்களிலில் பிரதிஷ்டை செய்ய நேற்று முன்தினம் காலை யாக சாலையில் சிறப்பு பூஜைகள் செய்வித்த 33 பெண் கடவுள்களின் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் சின்ன ஜீயர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago