தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழில் பிரதமரின் படத்தை நீக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது கேரள உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கரோனா வைரஸ் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்கக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தில் பீட்டர் மயாலிபரம்பில் என்பவர் தாக்கல் செய்துள்ள மேல்முறை யீட்டு மனுவில் கூறியுள்ளதாவது:

பொதுமக்களுக்கு வழங்கப் படும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. விளம்பர நோக்கத்துக்காகவும், மறைமுக நோக்கங்களுக்காகவும் இந்த புகைப்படத்தை சான்றிதழில் இடம்பெற செய்துள்ளனர். இதை நீக்க உத்தரவிட வேண்டும். இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த டிசம்பர் 21-ம் தேதி உயர் நீதிமன்ற தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பீட்டர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி எஸ். மணிக்குமார், நீதிபதி ஷாஜி பி.சாலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஆனால், மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியதாவது:

அரசியலமைப்பின் கீழ் உத்தர வாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மிகவும் லேசாக எடுத்துக் கொள்ளவோ, கருதவோ முடியாது. எனவே, குடிமக்கள் ஒரு சான்றிதழில் பிரதமரின் புகைப்படத்தை தாங்க முடியாத அளவுக்கு சகிப்புத் தன்மையற்றவர்களாக இருக்க முடியாது.

குடிமக்களின் கவனத்தையும் ஒத்துழைப்பையும் ஈர்ப்பதன் மூலம் தனது கடமைகள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்ற இந்திய அரசு மேற்கொண்ட முயற்சியாக மட்டுமே புகைப் படத்தை பார்க்க முடியும். மேலும், விளம்பரத்துக்காக என்ற கருத்து ஏற்க முடியாதது. பிரதமர் பதவி வகிப்பதன் மூலம் அவர் அனைவராலும் அறியப்பட்டவர். அத்துடன் சர்வதேச அளவில் அவர் பிரபலமானவர். புகைப்படம் இடம்பெறுவது விளம்பரம் என்பது சரியானதல்ல.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித் தனர். மேலும் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகக் குறைத்து செலுத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

- பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்