புதுடெல்லி: சட்டம் இயற்றுவோருக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தக் கோரியும் தண்டனை பெற்றவர்கள் சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்தில் இடம்பெறுவதை தடுக்க கோரியும் அஷ்வினி குமார் உபாத்யாய என்ற வழக்கறிஞர் கடந்த 2016 –ல் வழக்கு தொடர்ந்தார். “நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் அதிகமானோர் பதவி வகிக்கின்றனர். எனவே நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டியது மிகவும் அவசியம்” என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவி வரும் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, உச்ச நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த அறிக்கையில் கூறி யிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தின் தொடர்ச்சி யான வழிகாட்டுதல்கள் மற்றும் கண்காணிப்பு இருந்தபோதிலும் முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் 4,984 ஆக அதிகரித்துள்ளது.
இவர்கள் மீது 2018 டிசம்பர் நிலவரப்படி 4,110 வழக்குகளும் 2020 அக்டோபர் நிலவரப்படி 4,859 வழக்குகளும் நிலுவையில் இருந்தன.
2018 டிசம்பர் 4-க்கு பிறகு 2,775 வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகும், எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் 4,122-ல் இருந்து 4,984 ஆக அதிகரித்துள்ளது. இந்த 4,984 வழக்குகளில் 3,322 வழக்குகள் மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும் 1,651 வழக்கு கள் அமர்வு நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.
இவற்றில் 1,899 வழக்குகள் 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. 1,475 வழக்குகள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago