சண்டிகர்: தனியார் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று ஹரியாணா மாநில அரசு சட்டம் இயற்றியது. ஆனால் இதற்கு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மாநில அரசின் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இத்தகைய தடை உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களுக்கு ஓரளவு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது. மாநில அரசின் திடீர் உத்தரவால் தங்களது தொழில் மற்றும் முதலீடு பாதிக்கப்படும் என கவலைப்பட்டு வந்த தனியார் தொழில் நிறுவனங்கள் இந்த தீர்ப்பால் ஓரளவு நிம்மதி அடைத்துள்ளன.
ஹரியாணா மாநிலத்தில் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சட்டம் 2020-ம் ஆண்டு கொண்டுவரப் பட்டது. இதன்படி மாநிலத் தில் செயல்படும் தனியார் நிறுவனங்களும் வேலை வாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த உத்தரவு கடந்தஜனவரி 15 முதல் அமல்படுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்திருந்தது.
மாநில அரசு பிறப்பித்த சட்டமானது தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளை மற்றும் லிமிடெட் நிறுவனங்கள், கூட்டாளி நிறுவனங்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago