ஆகஸ்ட்டில் சந்திரயான் 3 விண்ணில் செலுத்தப்படும்: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வரும் ஆகஸ்ட்டில் சந்திரயான்- 3 -ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியதாவது:

2022 ஆகஸ்ட்டில் சந்திரயான்-3-ஐ விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான்-2லிருந்து கற்றுக்கொண்டது மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் சந்திரயான்-3-ஐ வெற்றிகரமாக்கும் செயல்படுத்தும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெறுகின்றன.

இது தொடர்பான வன்பொருள்கள் அவற்றின் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு 2022 ஆகஸ்ட்டில் செலுத்த திட்டமிடப்பட்ட்டுள்ளது.

2022 ஜனவரி முதல் டிசம்பர் வரை 19 முறை 8 கலன்கள் விண்ணில் செலுத்தும் திட்டமும் உள்ளன. இதில் 07 விண்கலத் திட்டங்கள், 04 தொழில்நுட்ப செய்முறை திட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.

நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டன. விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புதிதாக அறிமுகம் செயபப்பட்ட தேவையால் இயக்கப்படும் மாதிரிகள் பின்னணியில் திட்டங்களுக்கு மறுமுன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது . கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

57 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்