புதுடெல்லி: மோட்டார் வாகன விதிகள் செயல்படுத்தப்பட்ட பிறகு தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட அபராதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:
நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின் படி, 2018-ல் மொத்தம் 4,67,041 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 3,10,612-ம், மது/போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 12,018-ம் பாதை ஒழுங்கில்லாமை காரணமாக 24,781-ம், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 4,441-ம், கைபேசி பயன்பாட்டின் காரணமாக 9,039-ம், இதர காரனங்களுக்காக 1,06,150-ம் ஏற்பட்டுள்ளன.
2019-ம் ஆண்டில் மொத்தம் 4,49,002 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 3,19,028-ம், மது, போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 12,256-ம் பாதை ஒழுங்கில்லாமை காரணமாக 24,431-ம், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 4,443-ம், கைபேசி பயன்பாட்டின் காரணமாக 10,522-ம், இதர காரனங்களுக்காக 78,322-ம் ஏற்பட்டுள்ளன.
» பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் சன்னியா? சித்துவா? - 6-ம் தேதி அறிவிக்கிறார் ராகுல் காந்தி
2020-ம் ஆண்டில் மொத்தம் 3,66,138 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 2,65,343-ம், மது, போதைப் பொருள் உட்கொண்டு வாகனம் ஓட்டியதன் காரணமாக 8,355-ம் பாதை ஒழுங்கில்லாமை காரணமாக 20,228-ம், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 2,721-ம், கைபேசி பயன்பாட்டின் காரணமாக 6,753-ம், இதர காரனங்களுக்காக 62,738-ம் ஏற்பட்டுள்ளன.
புதிய சட்டத்தின் வாயிலாக நாடு முழுவதும் 1 செப்டம்பர் 2019 முதல் 31 டிசம்பர் வரை ரூ 550,73,02,804-ம், 1 ஜனவரி 2020 முதல் 31 ஜனவரி 2020 வரை ரூ 1564,57,21,915-ம், 1 ஜனவரி 2021 முதல் 31 ஜனவரி 2021 வரை ரூ 2104,29,52,569-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 செப்டம்பர் 2019 முதல் 31 டிசம்பர் வரை ரூ 26,75,52,184-ம், 1 ஜனவரி 2020 முதல் 31 ஜனவரி 2020 வரை ரூ 87,04,10,836-ம், 1 ஜனவரி 2021 முதல் 31 ஜனவரி 2021 வரை ரூ 92,24,75,383-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago