நாடு முழுவதும் புதிதாக 1,72,433 பேருக்கு கரோனா: 15 முதல்18 வயதுடையோருக்கு 2 ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வலியுறுத்தல்

By ஏஎன்ஐ

புதுடெல்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,72,433 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது நேற்றைவிட 7% அதிகம். அதேபோல் அன்றாட பாசிடிவிட்டி விகிதமும் நேற்றுமுன் தினம் 9.26% என்றளவில் இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10.99% ஆக சற்றே அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேர நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 1,72,433.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 4,18,03,318.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 2,59,107.

இதுவரை குணமடைந்தோர்: 3,97,70,414.

சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 15,33,921.

தினசரி பாசிடிவிட்டி விகிதம் 10.99% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 1008.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,98,983.

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை: 167.87 கோடி.

இதற்கிடையில், மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 15 வயது முதல் 18 வயதுடையோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்