உங்கள் வாழ்நாளில் தமிழகத்தை ஆட்சிசெய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி தெறிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸின் வயநாடு தொகுதி எம்.பி.யும், கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, "ஏழைகளுக்கு ஓர் இந்தியா, பணக்காரர்களுக்கு ஓர் இந்தியா" என பாஜக அரசைக் கடுமையாக விமர்சித்தார். மேலும், “மாநில உரிமைகளைக் காப்பதில் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்றார்.

ராகுல்காந்தி தனது பேச்சில், "குடியரசுத் தலைவர் உரையில் பேசப்படாத 3 அடிப்படை விஷயங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். முதலாவதாக, நான் மிக முக்கியமானதாகக் கருதுவது, 'இரண்டு இந்தியா' யோசனை. இங்கு இரண்டு இந்தியா உள்ளன. அபரிமிதமான செல்வம், அபரிமிதமான அதிகாரத்தை வைத்துக்கொண்டு, வேலை தேவையில்லாத, தண்ணீர் இணைப்பு, மின்சாரம் போன்ற எதுவும் தேவைப்படாமல் நாட்டின் ஆன்மாவை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய பணக்காரர்களுக்கென ஓர் இந்தியா உள்ளது. மற்றொரு இந்தியா ஏழைகளுக்கானது. இந்த இரு இந்தியாவிற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது.

மேட் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். மேட் இன் இந்தியா இனி சாத்தியமில்லை. மேட் இன் இந்தியாவை நீங்கள் அழித்துவிட்டீர்கள். சிறு, குறு தொழில்களை ஆதரிக்கவில்லையெனில் இனி மேட் இன் இந்தியா சாத்தியமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். சிறிய நடுத்தர தொழில்கள் மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். மேட் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்றவற்றைப் பற்றி நீங்கள் பேசிக் கொண்டே இருக்கும்வேளையில் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருகிறது

குடியரசுத் தலைவர் உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய இளைஞர்கள் வேலை கேட்கிறார்கள். ஆனால் உங்கள் அரசால் வேலை கொடுக்க முடியவில்லை. 2021-ல் மூன்று கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது என்பதை இது உணர்த்துகிறது. பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி கொள்கை, கரோனா காலத்தில் எந்த உதவியும் செய்யப்படாதது போன்றவற்றால் இந்திய மக்கள் தொகையின் 84% பேர் வருமானம் குறைந்துள்ளது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது.

இவை நாங்கள் தயார் செய்த புள்ளிவிவரங்கள் அல்ல. இவை உண்மையான தரவுகள். இந்த 27 கோடி மக்களையும் நீங்கள் மீண்டும் வறுமையில் தள்ளியுள்ளீர்கள். இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், சுரங்கங்கள், எரிவாயு விநியோகம், எதுவாக இருந்தாலும் ஒரு சிலருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் அதானி என்றால் மறுபக்கம் அம்பானி. தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்குப் பணம் அனைத்தும் செல்கிறது. துரதிர்ஷ்டவசமாக, குடியரசுத் தலைவர் உரையானது அரசாங்கம் செய்ததாகக் கூறும் விஷயங்களின் பட்டியலாகவே இருந்துள்ளது. அந்த உரையில் சிக்கல்களுக்கான தீர்வுகள் இல்லை. நம் நாடு எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை அது பேசவில்லை.

மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. இந்தியா மீது இரண்டு விதமான பார்வைகள் உள்ளன. அதில் ஓன்று இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். பேச்சுவார்த்தை, உரையாடலில் சொல்வதென்றால் மாநிலங்கள் உடன் இணைந்த கூட்டணியே. இந்தியா ஒரு ராஜ்ஜியம் கிடையாது; நீங்கள் ராஜாவும் இல்லை. இதை மறந்துவிடாதீர்கள். இந்த விவகாரத்தில் மொத்த இந்தியாவும் தமிழகத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்றார் ராகுல் காந்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்