புதுடெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையானது அடுத்த 25 ஆண்டுகளை உத்தேசித்து உருவாக்கப்பட்ட தொலை நோக்கு பட்ஜெட் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று தாக்கல் செய்யும் 4-வது பட்ஜெட் இதுவாகும்.
அடுத்த 25 ஆண்டுகளை உத்தேசித்து திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வரும் காலங்களில் இதை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்க இது முன்னோடியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகிறது. நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் தருணத்தில் இந்தியா எத்தகைய பொருளாதார நிலையை எட்டியிருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற தொலைநோக்கு சிந்தனையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
சுதந்திர அமுதத்தை நாம் அனுபவிக்கும் விதமாக பேரியல் மற்றும் நுண் பொருளாதாரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் பொதுமக்கள் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
எதிர்காலங்களில் எதிர்ப்படும் சவால்களை சமாளிக்கும் வகையில் இந்தியா வலுவான பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. வரும் காலங்களில் அரசு முதலீடுகளை அதிகரித்து நவீன கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் தொடரும் என்றார். பிரதமரின் கதி சக்தி திட்டத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்கு 7 முக்கிய அம்சங்கள் அவசியமாகிறது.
அவை சாலை, ரயில், விமானம், துறைமுகம், போக்குவரத்து, நீர்வழி மற்றும் சரக்குப் போக்குவரத்து, கட்டமைப்பு வசதிகளாகும். இவற்றை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago