ஆந்திரா, தெலங்கானாவுக்கு ஏமாற்றம்: சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் குற்றச்சாட்டு

By என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: மத்திய பட்ஜெட் குறித்து தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஹைதரபாத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகாபாரதத்தில் பீஷ்மர் இறக்கும் தருவாயில் கூறிய சுலோகத்தை மேற்கோள் காட்டி மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். கூறுவது தர்மம், செய்வது அதர்மம். தெலங்கானாவின் மருமகள் என கூறிக்கொள்ளும் அவர், இம்மாநிலத்திற்கு எதுவும் அறிவிக்கவில்லை. லாபத்தில் இயங்கும் எல்ஐசியை எதற்கு விற்க வேண்டும்? உரம் மீது ரூ.35 ஆயிரம் கோடி மானியத்தை அவர் குறைத்து விட்டார்.

விவசாய போராட்டத்தில் 700 விவசாயிகள் உயிர் துறந்தாலும், விவசாயத்திற்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கவில்லை. இந்த கரோனா காலகட்டத்தில் இதற்காக தனி நிதியை மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

சந்திரபாபு கருத்து

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறும்போது, ‘‘ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்கு மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கவில்லை. நதிநீர் இணைப்பை வரவேற்கிறேன். ஆனால், ஆந்திர மாநில வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் எதுவும்அறிவிக்கவில்லை. இது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி.க்களின் ஆர்வமின்மையை காட்டுகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்