புது டெல்லி: தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்த மாற்றமும் இல்லை; மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி (கிரிப்டோ வரி) உள்ளிட்ட அம்சங்களுடன் மத்திய பட்ஜெட் 2022-23-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரியை பொறுத்தவரையில் பலன் பெறும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவீத கார்ப்பரேட் வரி விகிதத்தை அரசு ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இது இப்போது 2024, மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரிச் சலுகைகளைப் பெறுவதற்கு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கால அவகாசமும் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் 2022-23-ன் சிறப்பு அம்சங்கள்:
> இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என்ற அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
> உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 14 துறைகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
> உற்பத்தியுடன் இணைந்த முதலீட்டுத் திட்டத்தின்மூலம் கூடுதலாக 30 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உற்பத்தி நடைபெறும்.
நேர்முக வரிகள்:
> கூடுதல் வரி செலுத்துவதற்கு புதிய வடிவிலான கணக்கு தாக்கலுக்கு வாய்ப்பு. ஏற்கெனவே தவறவிட்ட வருவாயை அறிவிப்பதற்கு மதிப்பீட்டாளரால் இயலும். உரிய மதிப்பீட்டு ஆண்டின் இறுதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் கணக்கு தாக்கல் செய்ய முடியும்
கூட்டுறவு சங்கங்கள்:
> கூட்டுறவுகளால் செலுத்தப்பட்ட குறைந்தபட்ச மாற்றுவரி விகிதம் 18.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
> கூட்டுறவு சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே சமச்சீரான வாய்ப்பை வழங்குதல்
> ரூ.1 கோடிக்கும் அதிகமாகவும், ரூ.10 கோடி வரையிலும் மொத்த வருமானம் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான கூடுதல் வரி 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
> மாற்றுத்திறனாளிகளுக்கு வரி நிவாரணம்: பெற்றோர்கள் / காப்பாளர்களின் வாழ்க்கை காலத்தில் அதாவது பெற்றோர்கள் / காப்பாளர்கள் 60 வயதை எட்டிய போது, மாற்றுத்திறனாளிகளை சார்ந்திருப்போருக்கு காப்பீட்டு திட்டத்தில் இருந்து கிடைக்கும் வருடாந்திர தொகை அல்லது மொத்த தொகை அனுமதிக்கப்படும்.
> தேசிய ஓய்வூதிய திட்டப் பங்களிப்பில் சமநிலை: மாநில அரசு ஊழியர்களின் தேசிய ஓய்வூதிய திட்ட கணக்கிற்குப் பங்களிப்பு செய்யும் உரிமையாளர்களுக்கான வரிப்பிடித்த வரம்பு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக இவர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இது சமூகப் பாதுகாப்புப் பலன்களை விரிவாக்க உதவும்.
புதிய தொழில்களுக்கு ஊக்குவிப்பு
> தகுதி வாய்ந்த புதிய தொழில்களுக்கு வரிப் பயன் கிடைப்பதற்கான இணைப்புக்காலம் ஓராண்டிற்கு, 31.03.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இணைப்புக்கான கால வரம்பு ஏற்கெனவே 31.03.2022 ஆக இருந்தது.
சலுகை வரி முறையின் கீழ் ஊக்குவிப்பு திட்டங்கள்:
> பிஏபி பிரிவு 115-ன் கீழ் தயாரிப்பு அல்லது உற்பத்தி தொடக்கத்திற்கான கடைசி தேதி ஓராண்டுக்கு அதாவது 31 மார்ச் 2023-ல் இருந்து 31 மார்ச் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் வரி விதிப்புக்கான திட்டம்:
> மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களுக்கான குறிப்பிட்ட வரிமுறை (கிரிப்டோ வரி) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றத்திலிருந்து கிடைக்கும் வருவாய்க்கு 30 சதவீத விகிதத்தில் வரி விதிக்கப்படும்.
> ஆர்ஜித செலவு தவிர மற்ற வருவாயை கணக்கிடும் போது செலவு அல்லது ஊதியம் வரிக்குறைப்புக்கு அனுமதிக்கப்பட மாட்டாது.
> மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களின் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்பு இதர வருவாய்க்கு மாற்றாக எடுத்துக் கொள்ள இயலாது
> பரிமாற்ற விவரங்களை பெறுவதற்கு மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட தொகைக்கு ஒரு சதவீத அளவிற்கு டிடிஎஸ் (வருவாயிலிருந்து வரிப்பிடித்தம்) பிடித்தம் செய்யப்படும்.
> மெய்நிகர் டிஜிட்டல் சொத்து பரிசளிக்கப்படும் போது அதனை பெறுபவருக்கு வரி விதிக்கப்படும்.
கூடுதல் வரியில் சீர்திருத்தம்
> ஏஓபி-க்கள் (ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமைக்கப்படும் கூட்டமைப்பு) மீதான கூடுதல் வரி உச்சவரம்பு 15 சதவீதமாக இருக்கும்.
> தனி நபர் நிறுவனங்களுக்கும், கூட்டு நிறுவனங்களுக்கும் இடையேயான துணை வரியில் பாகுபாடு குறைக்கப்படும்
> எந்தவகையான சொத்துக்கள் பரிமாற்றத்திலிருந்தும் கிடைக்கின்ற நீண்டகால மூலதன லாபங்கள் மீதான துணை வரி 15 சதவீதமாக இருக்கும்
> புதிய தொழில் தொடங்கும் சமூகத்தினருக்கு ஊக்கம் அளிப்பதற்காக வருவாய் மற்றும் லாபங்கள் மீதான துணை வரி அல்லது செஸ் வரி வர்த்தக செலவாக அனுமதிக்கப்பட மாட்டாது
டிடிஎஸ் அம்சங்களில் சீர்திருத்தங்கள்
> வணிக மேம்பாட்டு உத்தியாக முகவர்களின் கைகளில் இருக்கும் வரி விதிப்பின் பயன்கள் முகவர்களுக்கு வழங்கப்படும்.
> நிதியாண்டின் போது ஒரு நபருக்கு வழங்கப்படும் பணப்பயன்களின் மொத்த மதிப்பு ரூ.20,000-ஐ கடக்கும் போது வரிப்பிடித்தம் செய்யப்படும்.
மறைமுக வரிகள் - குறிப்பிட்ட துறை முன்மொழிவுகள்:
> மின்னணு: அணியக் கூடிய உபகரணங்கள், கேட்கும் உபகரணங்கள், மின்னணு ஸ்மார்ட் மீட்டர்கள், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க படிப்படியான விகித அமைப்பை உருவாக்க சுங்கத் தீர்வை விகிதங்கள் திருத்தியமைக்கப்படும்.
> மொபைல் ஃபோன் மின்னூக்கிகள் மின்மாற்றி, மொபைல் கேமராவுக்கான கேமரா லென்ஸ் ஆகியவற்றின் பாகங்கள் மற்றும் சில பொருட்களுக்கு, உயர் வளர்ச்சி மின்னணு பொருட்கள் உற்பத்தியை உள்நாட்டில் ஊக்குவிக்கும் தீர்வை சலுகைகள்.
வைரங்கள் மற்றும் ஆபரணங்கள்:
> பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள் மற்றும் வைரக்கற்கள் மீதான சுங்கத் தீர்வை 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. வைரங்கள் மற்றும் நகைப்பிரிவை ஊக்குவிக்கும் வகையில் அறுக்கப்பட்ட வைரங்களுக்கு சுங்கத் தீர்வை இல்லை.
> மின் வணிகம் மூலம் நகை ஏற்றுமதியை ஊக்கவிக்க இந்த ஆண்டு ஜூன் மாதம் எளிதாக்கப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பு அமல்படுத்தப்படும்.
> கவரிங் நகை இறக்குமதிக்கு ஊக்கத் தடை விதிக்கும் வகையில், கவரிங் நகை இறக்குமதி மீது குறைந்தபட்சம் கிலோவுக்கு ரூ.400 வீதம் சுங்கத் தீர்வை செலுத்த வேண்டும்.
ரசாயனங்கள்:
> மெத்தனால், அசிடிக் ஆசிட் போன்ற சில முக்கிய ரசாயனங்கள், பெட்ரோலிய சுத்திகரிப்புக்கான கனரக இருப்பு மீதான சுங்கத் தீர்வை குறைக்கப்படுகிறது; உள்நாட்டு உற்பத்தித் திறன் உள்ள சோடியம் சயனைடு மீதான தீர்வை அதிகரிக்கப்படுகிறது. இது உள்நாட்டு மதிப்புக் கூடுதலை அதிகரிக்க உதவும்.
எம்எஸ்எம்இ:
> குடைகள் மீதான சுங்கத் தீர்வை 20 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது. குடைகளுக்கான பாகங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை திரும்பப் பெறப்படுகிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் துறைக்கான உபகரணங்கள் மீதான சலுகை மாற்றியமைக்கப்படுகிறது.
> சிறு, குறு, நடுத்தர தொழிலின் இரண்டாம் கட்ட உருக்கு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில் இரும்புக் கழிவுகளுக்கு சுங்கத் தீர்வை விலக்களிக்கப்படுகிறது.
> பொது நலன் கருதி உலோகங்களுக்கு அதிக விலை அளிக்கும் வகையில், துருப்பிடிக்காத ஸ்டீல், இரும்புக் கம்பிகள், அல்லாய் ஸ்டீல் மீதான சிவிடி தீர்வை ரத்து செய்யப்படுகிறது.
ஏற்றுமதிகள்:
> ஏற்றுமதியை ஊக்குவிக்க அலங்காரம், டிரிம்மிங், பாஸ்ட்னர்கள், பொத்தான்கள், ரிவிட், லைனிங் மெட்டீரியல், குறிப்பிட்ட தோல், மரச்சாமான்கள் பொருத்துதல்கள் மற்றும் பேக்கேஜிங் பெட்டிகள் போன்ற பொருட்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
> இறால் ஏற்றுமதியை ஊக்குவிக்க, இறால் வளர்ப்புக்குத் தேவையான சில பொருட்கள் மீதான தீர்வை குறைக்கப்படுகிறது.
> எரிபொருள் கலப்பை ஊக்குவிக்க கட்டண அளவீடு
> எரிபொருள் கலப்பை ஊக்குவிக்க, கலக்காத எரிபொருளுக்கு 2022 அக்டோபர் 1 முதல் லிட்டருக்கு ரூ.2 வீதம் கூடுதல் வித்தியாச கலால் வரி விதிக்கப்படும்.
Loading...
> நாடு அடுத்த 25 ஆண்டுகளில் 100வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ள நிலையில், நீண்டகால திட்டங்களுக்காக நான்கு முக்கிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவை: பிரதமர் கதிசக்தி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, உற்பத்தி மேம்பாடு மற்றும் முதலீடு, புதிய வாய்ப்புகள், எரிசக்தி மாற்றம் மற்றும் பருவநிலை திட்டம், முதலீட்டிற்கான நிதி.
பிஎம் கதிசக்தி: சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், விரைவுப் போக்குவரத்து, நீர்வழிகள், போக்குவரத்து உள்கட்டமைப்பு ஆகியவை பிஎம் கதிசக்தியை இயக்கும் 7 என்ஜின்கள் ஆகும்.
பிஎம் கதிசக்தி தேசிய பெருந்திட்டம்: பிஎம் கதிசக்தி தேசிய பெருந்திட்டத்திற்கான வாய்ப்பு பொருளாதார மாற்றம், வலுவான பன்மாதிரி இணைப்பு மற்றும் போக்குவரத்துத் திறனுக்கான 7 என்ஜின்களை உள்ளடக்கியதாகும். தேசிய உள்கட்டமைப்பு திட்டத்தில், இந்த 7 என்ஜின்களை உள்ளிடக்கிய திட்டங்கள் பிஎம் கதிசக்தி வரையறைக்குள் கொண்டு வரப்படும்.
சாலைப் போக்குவரத்து: 2022-23-ல் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு 25,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு விரிவாக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பு விரிவாக்கத்திற்கான ரூ.20,000 கோடி திரட்டப்படும்.
பன்மாதிரி போக்குவரத்து பூங்காக்கள்: 2022-23-ல் பன்மாதிரி போக்குவரத்து பூங்காக்களை 4 இடங்களில் செயல்படுத்துவதற்கு தனியார் பொதுத்துறை கூட்டு முயற்சி மூலம் ஒப்பந்தங்கள் வழங்கப்படும்
ரயில்வே:
> உள்ளூர் வர்த்தகம் மற்றும் விநியோக சங்கிலிக்கு உதவும் வகையில், ஒரு நிலையம் ஒரு பொருள் என்ற கருத்தியல் நடைமுறைப்படுத்தப்படும்.
> 2022-23 உலகத் தரம் வாய்ந்த உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் திறன் அதிகரித்தலுக்கு கவாஜ் திட்டத்தின் கீழ் 2000 கிலோ மீட்டர் ரயில்வே கட்டமைப்பு கொண்டு வரப்படும்.
> அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய தலைமுறை வந்தே பாரதம் ரயில்கள் தயாரிக்கப்படும்.
> அடுத்த 3 ஆண்டுகளில் பன்மாதிரி சரக்குப் போக்குவரத்துக்கான 100 பிஎம் கதிசக்தி சரக்கு முனையங்கள் உருவாக்கப்படும்.
பர்வதமாலா:
> தேசிய ரோப்வே வளர்ச்சித் திட்டம் பர்வதமாலா பொதுத்துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும்.
> 2022-23-ல் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 ரோப்வே திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும்.
வேளாண்மை:
> கோதுமை மற்றும் நெல் கொள்முதலுக்காக 1.63 கோடி விவசாயிகளுக்கு ரூ.2.37 லட்சம் கோடி நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.
> நாடு முழுவதும் ரசாயன கலப்பற்ற இயற்கை வேளாண்மை மேம்படுத்தப்படும். கங்கை நதியின் குறுக்கே 5 கிலோ மீட்டர் அகல வழித்தடத்தின் விவசாய நிலங்கள் மீது ஆரம்பக்கட்ட கவனம் செலுத்தப்படும்.
> வேளாண்மை மற்றும் கிராமப்புற தொழில் தொடங்வோருக்கு நிதி அளிக்க மூலதனத்துடன் கூடிய நிதியை நபார்டு வழங்கும்.
> பயிர் மதிப்பீடு, நில ஆவணங்கள் டிஜிட்டல்மயமாக்கம், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்து தெளித்தலுக்கு கிசான் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
கென்- பெட்வா திட்டம்:
> கென் – பெட்வா இணைப்புத் திட்ட அமலாக்கத்துக்கு ரூ.1400 கோடி ஒதுக்கீடு
> கென் – பெட்வா இணைப்புத் திட்டத்தால் 9.08 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ):
> உதயம், இ-ஷ்ரம், என்சிஎஸ் மற்றும் அசீம் (ASEEM) இணையதளங்கள் ஒன்றாக இணைக்கப்டும்.
> 130 லட்சம் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் (ECLGS) கீழ் கூடுதல் கடன் வழங்கப்பட்டது.
> இசிஎல்ஜிஎஸ் 2023ம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்படவுள்ளது.
> இசிஎல்ஜிஎஸ் திட்டத்தின் கீழான உத்திரவாதம் விரிவுபடுத்தப்படவுள்ளது. ரூ.50,000 கோடி அதிகரிக்கப்பட்டு மொத்தம் ரூ. 5 லட்சம் கோடியாக விரிவுபடுத்தப்படும்.
> குறு மற்றும் சிறு நிறுவனங்ளுக்கான கடன் உத்திரவாத அறக்கட்டளையின் (CGTMSE) கீழ், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் வழங்கப்படும்.
> ரூ.6,000 கோடி மதிப்பில் எம்எஸ்எம்இ-க்களின் செயல்பாட்டை மேம்படுத்தும் திட்டம்(RAMP) அறிமுகம் செய்யப்படும்.
திறன் மேம்பாடு:
> ஆன்லைன் பயிற்சி மூலம் மக்களின் திறனை மேம்படுத்த திறன் மற்றும் வாழ்வாதாரத்துக்கான டிஜிட்டல் அமைப்பு (DESH-Stack இ-இணையதளம்) தொடங்கப்படும்.
> ட்ரோன் சேவைகளுக்கு, ‘ட்ரோன் சக்திக்கு’ உதவ தொடக்கநிலை நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்.
கல்வி:
> பிரதமரின் இ-வித்யா திட்டத்தின் ‘ஒரு வகுப்பு- ஒரு டி.வி சேனல்’ 200 டி.வி சேனல்களாக விரிவுபடுத்தப்படும்.
> விவேகமான சிந்திக்கும் திறன்களை ஊக்குவிக்க மெய்நிகர் ஆய்வு கூடங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மின்னணு-ஆய்வு கூடங்கள் மற்றும் கற்றல் சூழல் ஏற்படுத்தப்படும்.
> டிஜிட்டல் ஆசிரியர்கள் மூலம் கல்வி கற்பிக்க உயர்தர மின்னணு-பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
> உலகத்தரத்திலான கல்விக்கு டிஜிட்டல் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும்.
சுகாதாரம்:
> தேசிய டிஜிட்டல் சுகாதார அமைப்புக்கு திறந்தவெளி தளம் அறிமுகப்படுத்தப்படும்.
> தரமான மனநல ஆரோக்கிய கலந்தாய்வுக்கு ‘தேசிய தொலைதூர மன நல திட்டம் மற்றும் சேவைகள் தொடங்கப்படும்.
> நிமான்ஸ்- ஐ சிறப்பு மையமாக கொண்டு 23 தொலை தூர மன நல சிறப்பு மையங்களின் நெட்வொர்க் ஏற்படுத்தப்படும். இதற்கான தொழில்நுட்ப உதவிகளை பெங்களூரில் உள்ள சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையம்(IIITB) வழங்கும்.
ஷக்ஷம் அங்கன்வாடி:
> மிஷன் சக்தி, மிஷன் வத்சல்யா, ஷக்ஷம் அங்கன்வாடி மற்றும் போஷான் 2.0 திட்டம் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பயன்கள்
> 2 லட்சம் அங்கன்வாடிக்கள் ஷக்ஷம் அங்கன்வாடிகளாக மேம்படுத்தப்படும்.
> ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு: வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 3.8 கோடி வீடுகளுக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கப்பட்டது.
அனைவருக்கும் வீடு
> பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்க ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டது.
> வடகிழக்கு மாநிலங்களில் சமூக வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமரின்-DevINE என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்ப கட்டமாக ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
> வடக்கு எல்லையில் குறைவான மக்கள், இணைப்பு வசதி மற்றும் கட்டமைப்புகள் உள்ள எல்லை கிராமங்களின் மேம்பாட்டுக்கு துடிப்பான கிராமங்கள் திட்டம் தொடங்கப்பட்டது.
வங்கி வசதிகள்
> 1.5 லட்சம் தபால் அலுவலகங்களில் 100 சதவீதம் வங்கி அமைப்புக்குள் வரவுள்ளன.
> வணிக வங்கிகள், 75 மாவட்டங்களில், 75 டிஜிட்டல் வங்கி யூனிட்டுகளை தொடங்கவுள்ளன.
> இ-பாஸ்போர்ட்: மின்னணு சிப்கள் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுகள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.
நகர்ப்புற திட்டம்:
> கட்டிட விதிகளின் நவீனமயமாக்கல், நகர திட்டமிடல் திட்டங்கள் மற்றும் போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி ஆகியவை அமல்படுத்தப்படும்.
> நகர பகுதிகளில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க பேட்டரி மாற்று கொள்கை கொண்டு வரப்படும்.
> நில ஆவணங்கள் மேலாண்மை
> தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நில ஆவணங்கள் மேலாண்மைக்கு தனித்துவமான நில அடையாள எண்.
> துரிதமான பெருநிறுவனம் வெளியேற்றம்
> நிறுவனங்கள் விரைவாக வெளியேறுவதற்கு, துரிதமான பெருநிறுவன வெளியேற்ற மையம் (C-PACE) அமைக்கப்படும்.
ஏவிஜிசி ஊக்குவிப்பு குழு: அனிமேஷன், விஷூவல் எபெக்ட்ஸ், விளையாட்டு மற்றும் காமிக்ஸ் (AVGC) ஆகியவற்றின் ஊக்குவிப்புக்கு இத்துறையில் தனி குழு உருவாக்கப்படும்.
> தொலை தொடர்பு துறை: உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக 5ஜி தொழில்நுட்பத்துக்கு வலுவான சூழலை உருவாக்க வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி திட்டம் தொடங்கப்படும்.
> ஏற்றுமதி வளர்ச்சி: நிறுவனம் மற்றும் சேவை மையங்கள் மேம்பாட்டில் மாநிலங்களையும் பங்குதாரர்களாக்க சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும்.
பாதுகாப்புத்துறையில் இந்தியா தற்சார்பு அடைதல்:
> 2022-23-ல் மூலதன கொள்முதலில் 68% உள்நாட்டு தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய பட்ஜெட்டில் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது 2021-22-ல் 58% ஆக இருந்தது.
> பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பெருந்தொழில்துறையினர், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவதுடன் இந்நிறுவனத்தின் பட்ஜெட்டில் 25% இதற்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
> பரிசோதனை மற்றும் சான்றிதழ் பெறுவதற்கு, சுதந்திரமான அமைப்பு ஒன்று உருவாக்கப்படும்.
> புதிய வகைப் பொருட்கள், சேவை வாய்ப்புகள்: செயற்கை நுண்ணறிவு, புவி வானியல் சாதனங்கள், மற்றும் ட்ரோன்கள் செமி கண்டக்டர் மற்றும் அதன் சூழல் அமைப்பு, விண்வெளி பொருளாதாரம், மரபியல் பொருளாதாரம் மற்றும் மருந்து பொருட்கள், பசுமை எரிசக்தி மற்றும் தூய்மையான போக்குவரத்து சாதனங்கள் போன்ற புதிய வகைப் பொருட்கள், சேவை வாய்ப்புகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு அரசு பங்களிப்பு வழங்கப்படும்.
எரிசக்தி மாற்றம் மற்றும் பருவநிலை செயல்திட்டம்:
> 2030-க்குள் 280 ஜிகாவாட் சூரியசக்தி உற்பத்தி இலக்கை அடைய, உயர்திறன் கொண்ட சூரியசக்தி சாதனங்களை உற்பத்தி செய்ய, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக ரூ.19,500 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும்.
> அனல் மின் நிலையங்களில் உயிரி கழிவு வில்லைகள், 5 முதல் 7% அளவுக்கு இணை எரிபொருளாக பயன்படுத்தப்படும்.
> ஆண்டுக்கு 38 மில்லியன் மெட்ரிக் டன் கரியமில வாயு (CO2) வெளியேற்றம் தவிர்ப்பு.
> விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு
> விளை நிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிப்பதை தவிர்க்க உதவி
> தொழிற்சாலைகளுக்காக நிலக்கரியை ரசாயனப் பொருட்களாக மாற்றுதல் மற்றும் நிலக்கரி எரிவாயு நிலையங்களை அமைக்க நான்கு முன்னோடி திட்டங்கள் செயல்படுத்தப்படும்
> வேளாண் காடுகளை வளர்க்க விரும்பும் ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியின விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
அரசு மூலதன முதலீடு:
> 2022-23-ல் முக்கிய தனியார் முதலீடு மற்றும் தேவைகளை ஊக்குவிப்பதில் அரசு முதலீடு தொடரும்.
> நடப்பாண்டில் ரூ.5.54 லட்சம் கோடியாக உள்ள மூலதன செலவு ஒதுக்கீடு 2022-23-ல் 35.4% அதிகரிக்கப்பட்டு ரூ.7.50 லட்சம் கோடி ஒதுக்கீடு
> 2022-23-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 2.9% ஒதுக்கீடு
> மத்திய அரசின் ‘வலுவான மூலதன செலவு’ 2022-23-ல் ரூ. 10.68 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 4.1% ஆகும்.
> குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில், உலகத்தரம் வாய்ந்த வெளிநாட்டுப் பல்கல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடங்க அனுமதிக்கப்படும்.
> சர்வதேச நீதித்துறை விவேகத் திட்டத்தின் கீழ் , சச்சரவுகளுக்கு குறித்த காலத்திற்குள் தீர்வு காண ஏதுவாக சர்வதேச சமரசத் தீர்வு மையம் அமைக்கப்படும்.
வளங்களைத் திரட்டுதல்:
> தரவு மையங்கள் மற்றும் எரிசக்தி சேமிப்பு அமைப்புகளுக்கு கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்படும்
> கடந்த ஆண்டில் ரூ.5.5 லட்சம் கோடிக்கும் அதிகமான மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு மூலதனம் மற்றும் தனியார் பங்கு முதலீடு, பெரிய அளவிலான ஸ்டார்ட் அப் மற்றும் வளர்ச்சி சூழலுக்கு வகை செய்துள்ளது.
> புதிய வகை பொருட்கள், சேவை வாய்ப்புகள் துறைகளுக்கு கலப்பு நிதியம் ஊக்குவிக்கப்படும்.
> பசுமை கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்ட பசுமைத் தங்கப்பத்திரங்கள் வெளியிடப்படும்.
> டிஜிட்டல் பணம்: 2022-23-லிருந்து இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்தும்.
மாநிலங்களுக்கு அதிக நிதி வாய்ப்புகளை வழங்குதல்:
> ‘மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு’ ஒதுக்கீடு அதிகரிப்பு. ரூ.10,000 கோடி பட்ஜெட் மதிப்பீடு நடப்பாண்டின் திருத்திய மதிப்பீட்டில் ரூ.15,000 கோடி.
> பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த முதலீடுகளை ஊக்குவிப்பதில் மாநிலங்களுக்கு உதவ 2022-23-ல் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு: 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன்கள், வழக்கமான மற்றும் அதற்கு மேற்பட்ட கடன் வாங்க அனுமதி
நிதி மேலாண்மை
> பட்ஜெட் மதிப்பீடுகள் 2021-22: ரூ.34.83 லட்சம் கோடி
> திருத்திய மதிப்பீடுகள் 2021-22: ரூ.37.70 லட்சம் கோடி
> 2022-23-ல் மொத்த செலவினம் ரூ.39.45 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது
> 2022-23-ல் கடன் தவிர்த்த மொத்த வரவுகள் ரூ.22.84 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது
> நடப்பாண்டில் நிதிப்பற்றாக்குறை : மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.9% (பட்ஜெட் மதிப்பீடுகள் 6.8%)
> 2022-23-ல் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 6.4% ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago