புது டெல்லி: வேளாண் ட்ரோன்களின் பயன்பாடு, பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தெளித்தல் ஆகியவற்றிற்காக ஊக்குவிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
> வேளாண் ட்ரோன்களின் பயன்பாடு, பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தெளித்தல் ஆகியவற்றிற்காக ஊக்குவிக்கப்படும்.
> விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான தொடக்க நிலை நிதியளிக்க நபார்டு மூலம் எளிதாக்கப்படும். இது பண்ணை விளைபொருட்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற ஏதுவாகும்.
> ஸ்டார்ட்அப்கள் கொண்ட விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரிவளிக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவோம்.
> 2021-22 ராபி பருவத்தில் கொள்முதலில் 163 லட்சம் விவசாயிகளிடமிருந்து 1208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
> ரசாயனமற்ற இயற்கை விவசாயம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும்.
> 2022 ஆம் ஆண்டு தினை ஆண்டாக இருக்கும் என்பதால், அறுவடைக்குப் பிந்தைய தினை உற்பத்திக்கான மதிப்பு கூட்டலுக்கு ஆதரவளிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்
> 9. லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் நோக்கில் கென்-ட்வா இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும்.
> 5 நதி இணைப்புகளுக்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது, அவை செயல்படுத்தப்படுவதற்கு மத்திய அரசு ஆதரவை வழங்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago