புதுடெல்லி: 9 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் நோக்கில் கென்-ட்வா இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும் என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: > 2021-22 ராபி பருவத்தில் கொள்முதலில் 163 லட்சம் விவசாயிகளிடமிருந்து 1208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
> ரசாயனமற்ற இயற்கை விவசாயம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும்.
> 2022 ஆம் ஆண்டு தினை ஆண்டாக இருக்கும் என்பதால், அறுவடைக்குப் பிந்தைய தினை உற்பத்திக்கான மதிப்புக் கூட்டலுக்கு ஆதரவளிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்
» மத்திய பட்ஜெட் 2022: புதிதாக 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு
» மத்திய பட்ஜெட் 2022: அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள்
> 9 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் நோக்கில் கென்-ட்வா இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும்.
> 5 நதி இணைப்புகளுக்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது; அவை செயல்படுத்தப்படுவதற்கு மத்திய அரசு ஆதரவை வழங்கும்.
> உலகத்தரம் வாய்ந்த கல்விக்காக டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இது வெவ்வேறு இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும். இது நெட்வொர்க் மையங்கள் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. திறன் மேம்பாட்டுக்காக புதிய இணையதளம் தொடங்கப்படும்.
> கடந்த வருடங்களாக கல்வியை இழந்த தாழ்த்தப்பட்ட குழந்தைகளிடையே கல்வி அளிப்தற்காக புதிய கல்வித் தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும்.
> ஒரு வகுப்பு, ஒரு டிவி சேனல் என்ற திட்டம் 2-ல் இருந்து 200 டிவி சேனல்களாக விரிவுபடுத்தப்படும். இது அனைத்து பிராந்திய மொழிகளிலும் கல்வியை வழங்க மாநிலங்களுக்கு உதவும்.
> கிசான் ட்ரோன்களின் பயன்பாடு பயிர் மதிப்பீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தெளித்தல் ஆகியவற்றிற்காக ஊக்குவிக்கப்படும்,
> விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான தொடக்க நிலை நிதியளிக்க நபார்டு மூலம் எளிதாக்கப்படும். இது பண்ணை விளைபொருட்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற ஏதுவாகும்.
> ஸ்டார்ட்அப்கள் கொண்ட விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரிவளிக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவோம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago