மத்திய பட்ஜெட் 2022: புதிதாக 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்க இலக்கு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஆத்ம நிர்பர் பாரதத்தை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் இலக்கு கொண்டது. ஐந்தாண்டுகளில் 30 லட்சம் கோடி கூடுதல் உற்பத்தி செய்யவும் வாய்ப்பாக அமையும் என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

> ஆத்ம நிர்பர் பாரதத்தை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் இலக்கு கொண்டது.

> ஐந்தாண்டுகளில் 30 லட்சம் கோடி கூடுதல் உற்பத்தி செய்யவும் வாய்ப்பாக அமையும்.

> 2021-22 ராபி பருவத்தில் கொள்முதலில் 163 லட்சம் விவசாயிகளிடமிருந்து 1,208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

> ரசாயனமற்ற இயற்கை விவசாயம் நாடு முழுவதும் ஊக்குவிக்கப்படும்.

> 2022-ஆம் ஆண்டு தினை ஆண்டாக இருக்கும் என்பதால், அறுவடைக்குப் பிந்தைய தினை உற்பத்திக்கான மதிப்புக் கூட்டலுக்கு ஆதரவளிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

> 9.0 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் நோக்கில் கென்-ட்வா இணைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படும்.

> 5 நதி இணைப்புகளுக்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளன. அவை செயல்படுத்தப்படுவதற்கு மத்திய அரசு ஆதரவை வழங்கும்.

வாசிக்க > மத்திய பட்ஜெட் 2022 - முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE