மத்திய பட்ஜெட் 2022: அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் 

By செய்திப்பிரிவு

நியு டெல்லி: அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் கொண்டுவரப்படும் என்று மத்திய பட்ஜெட் 2022-23-ல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022-23-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:

> 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.

> மெட்ரோ அமைப்புகளை உருவாக்குவதற்கான புதுமையான வழிகளை செயல்படுத்த 100 பிரதமர் கதி சக்தி சரக்கு டெர்மினல்கள் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும்.

> பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான்: 2021-22 பட்ஜெட்டில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. வரும் பட்ஜெட் (2022-23) இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எஸ்சி, எஸ்டி, பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் மூலம் வழிநடத்தப்படும்.

> ஆத்ம நிர்பர் பாரதத்தை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் இலக்கு கொண்டது. ஐந்தாண்டுகளில் 30 லட்சம் கோடி கூடுதல் உற்பத்தி செய்யவும் வாய்ப்பாக அமையும்.

வாசிக்க > மத்திய பட்ஜெட் 2022 - முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்