உ.பி., பஞ்சாப் உட்பட 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்: நேரடி பிரச்சாரத்துக்கு பிப்.11 வரை தடை நீட்டிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

கரோனா பரவல் காரணமாக நேரடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதற்கு ஜனவரி 31-ம் தேதி வரை தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், பிப்ரவரி 11-ம் தேதி வரை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று நடத்திய ஆய்வுக்கு பிறகு கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி, உள்ளரங்குகளில் அதிகபட்சம் 500 பேர் வரையிலும், திறந்தவெளி கூட்டங்களில் 1,000 பேர் வரையிலும் பங்கேற்கலாம் என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. வீடு வீடாக பிரசாரம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 10-ல்இருந்து 20 ஆக உயர்த்தப்பட் டுள்ளது. எனினும், ரோட் ஷோ, பாதயாத்திரைகள், சைக்கிள், பைக், வாகன பிரசாரம் மற்றும் ஊர்வலங்கள் எதுவும் பிப்ரவரி 11-ம் தேதி வரை அனுமதிக்கப் படாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. - பிடிஐ

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE