பாஜகவில் இணைந்தார் மவுலானா தவுகீர் மருமகள்: முத்தலாக்கை ரத்து செய்த மோடிக்கு பாராட்டு

By செய்திப்பிரிவு

லக்னோ: உத்தரபிரதேசத்தின் பிரபல முஸ்லிம் தலைவரான மவுலானா தவுகீர் ரசா கானின் மருமகள் நேற்று பாஜகவில் இணைந்தார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மவுலானா தவுகீர் ரசா கான் இத்தேஹத்-இ-மில்லத் கவுன்சில் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இந்தக் கட்சி காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இவரது மருமகள் நிதா கான் நேற்று பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நிதா கான் கூறும்போது, “என்னுடன் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் பலரும் பாஜகவில் இணைந்துள்ளனர். மும்முறை தலாக் (முத்தலாக்) சொல்லும் முறையை ரத்து செய்துமுஸ்லிம் பெண்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தவர் பிரதமர் மோடி. அவரது சிறப்பான ஆட்சியால் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அவரதுஆட்சி மீது நம்பிக்கை வைத்துநாங்கள் பாஜகவில் சேர்ந்துள்ளோம். எனவே முஸ்லிம் பெண்கள்பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த முறையும் உ.பி.யில் பாஜக அமோக வெற்றி பெறும்.

என்னுடைய மாமனார், பெண்கள் உரிமை குறித்து வெளியே மட்டுமே பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தியை தனது சகோதரியாக நினைத்து அவர் காங்கிரஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் தன்னுடைய வீட்டில் உள்ள பெண்களின் உரிமை குறித்து அவர் சிந்தித்ததே இல்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்