ராகுல் காந்தியிடம் திருடியது யார்? - எம்.பி. ட்விட்டரால் சர்ச்சை

புதுடெல்லி: அண்மையில் பஞ்சாப் மாநிலத்தில் பிரச்சாரம் செய்ய சென்ற ராகுல் காந்தி, அமிர்த சரஸில் உள்ள பொற்கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். பின்னர் ஜலந்தர் சென்ற அவர், இணைய வழியாக பேரணியில் கலந்து கொண்டார். ராகுல் காந்தியுடன் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, துணை முதல்வர்கள் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா, ஓபி சோனி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "அமிர்தசரஸ் பொற்கோயிலில் ராகுல் காந்தியிடம் பிக்பாக்கெட் அடித்தது யார்? சரண்ஜித் சிங் சன்னியா? நவ்ஜோத் சித்துவா? அல்லது சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா? இசட் வகையிலானபாதுகாப்பைப் பெற்றிருக்கும் ராகுல் காந்தியை தாண்டி அவர் அருகே செல்ல இவர்கள் 3 பேருக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டது.

மதத்தை அவமதித்த சம்பவங் களுக்குப் பிறகு, நமது புனித தலத்துக்கு கெட்ட பெயரைக் கொண்டு வருவதற்கான மற்றொருமுயற்சியா இது?" என கேள்வி எழுப்பியிருந்தார். ஹர்சிம்ரத் கவுரின் கேள்விக்கு பதிலாக காங்கிரஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

சுர்ஜேவாலா கூறும்போது, "பஞ்சாபில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெறாதபோது இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவது மத நெறிமுறைகளை மீறுவது போன்ற தாகும். அரசியல் வேறுபாடுகள் தவிர்த்து, ஹர்சிம்ரத் கவுர் பொறுப்பாகவும் முதிர்ச்சியாகவும் நடந்து கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE