சாதி, மதத்தை வைத்து பாஜக, சமாஜ்வாதி பிரச்சாரம்: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புகார்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆட் சியை தக்க வைக்க பாஜக.வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதியும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பாஜக, சமாஜ்வாதி மீது பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும் பகுஜன் தலைவரு மான மாயாவதி கூறும்போது, ‘‘உ.பி. தேர்தலில் சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யப்படுகிறது. இந்த செய்தி களே பத்திரிகைகளிலும், ஊட கங்களிலும் நிறைந்துள்ளன. இந்து - முஸ்லிம் மோதலை உருவாக்குவதுடன், சாதி பிரி வினையும் பாஜக, சமாஜ் வாதி பிரச்சாரங்களில் முன்னிறுத்தப் படுகிறது. இந்த விஷயத்தில் உ.பி.வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் காஜியாபாத் தில் முதல்வர் ஆதித்யநாத் நேற்று பிரச்சாரம் செய்த போது, ‘‘உ.பி.யில் பாஜக ஆட்சியில் புனித யாத்திரையாக மானசரோவர் செல்லும் யாத்திரிகர்களுக்கு ரூ.94 கோடியில் டிசம்பர் 2020-ம் ஆண்டு தங்கும் விடுதி கட்டினோம். ஆனால், சமாஜ்வாதி ஆட்சியில் 2016-ல் இங்கு ஹஜ் ஹவுஸ் கட்டினார்கள்’’ என்று பேசினார்.

உ.பி.யில் 4 முறை ஆட்சி செய்த பிஎஸ்பி காலத்தில் செய்யப்பட்ட வளர்ச்சிப் பணிகளை தாம் செய்ததாக பாஜக காட்டுவதாகவும் மாயாவதி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாயாவதி மேலும் கூறுகையில், ‘‘பிஎஸ்பி ஆட்சியில் ஏழைகளுக்காக அடிப்படை வசதிகளுடன் 2.5 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டினோம். மேலும், 15 முதல் 20 லட்சம் பேருக்கு கட்டவிருந்த போது ஆட்சி முடிவு பெற்றது. இவற்றை தம் திட்டம் என பாஜக முன்னிறுத்த முயற்சிக்கிறது’’ என்றார்.

உத்தர பிரதேச தேர்தலில் ஆளும் பாஜகவிற்கும், முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக்கும் இடையே நேரடி போட்டி நிலவு கிறது. சமாஜ்வாதி, பாஜக.வின் ஆதரவு மற்றும் தனி மெஜாரிட்டி என 4 முறை முதல்வராக இருந்தார் மாயாவதி. எனினும், இந்த முறை பிஎஸ்பிக்கு 3-வது இடமே கிடைக்கும். பிரியங்கா காந்தி தலைமையில் போட்டியிடும் காங்கிரஸ் 4-வது இடத்துக்கு இடத்துக்கு தள்ளப்படும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்