சண்டிகர்: சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல், நாட்டின் அதிக வயதான வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸுக்கும் சிரோமணி அகாலிதளத்துக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அகாலி தளத்தின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரகாஷ் சிங் பாதல், கட்சியின் லம்பி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது 94 வயதாகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் தன்னுடைய 92-வது வயதில் போட்டியிட்டார். இதன்மூலம் நாட்டின் அதிக வயதான மூத்த வேட்பாளர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. தற்போது அகாலி தள மூத்த தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தன்னுடைய 94-வது வயதில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதன்மூலம் நாட்டின் அதிக வயதான வேட்பாளர் என்ற பெருமை பாதலுக்கு கிடைத்திருக்கிறது. பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பர் சிங் பாதல், சிரோமணி அகாலி தளத்தின் தலைவராக உள்ளார். கட்சியின் முதல்வர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago