அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயிலின் 3-ம் கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கி உள்ளதாக ராம் ஜென்மபூமி தீரத்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “ராமர் கோயில் பீடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பின்னர், கோயிலின் பிரதான கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கவுள்ளன. முதல் மற்றும் 2-ம் கட்ட கட்டுமானப் பணிகளில், கோயிலின் அடித்தளம் மற்றும் தெப்பம் அமைக்கப்பட்டது. அநேகமாக ஜூன் மாதத்திற்குள் பீடம் அமைக்கும் பணிகள் முடிவடையும்" என்றார்.
3-ம் கட்டப் பணிகளை ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை செயலர் சம்பத் ராய், நிர்வாகிகள் அனில் மிஸ்ரா, தீனேந்திர தாஸ் உள்ளிட்டோர் பூஜை செய்து தொடங்கி வைத்தனர். முன்னதாக யாகங்களும் நடைபெற்றன. கோயில் கட்டும் பணிகள் 2023-ம் ஆண்டில் நிறைவடைந்து பக்தர்களுக்கு திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago