தேசிய பேரிடர் மீட்புப் படையின் ட்விட்டர் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். நேற்று (ஜனவரி 22) பின்னிரவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர், தொழில்நுட்ப வல்லுநர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். விரைவில் ட்விட்டர் பக்கம் மீட்கப்படும் என்றார்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் ட்விட்டர் பக்கம் @NDRFHQ என்ற ஹேண்டிலில் இயங்கி வருகிறது. இதில் அத்துமீறி உள்நுழைந்த ஹேக்கர்கள் சில விஷமமான தகவல்களைப் பகிர்ந்தனர். இருப்பினும் ட்விட்டர் ஹேண்டிலின் டிபி, மற்றும் என்டிஆர்எஃப் குறித்த பயோடேட்டாவும் நீக்கப்படவில்லை.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) கடண்ட 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஜனவரி 19 ஆம் தேதிதான் இந்த அமைப்பு தனது 17வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்நிலையில் நேற்றிரவு இந்த அமைப்பின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 12 ஆம் தேதி மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சக ட்விட்டர் பக்கத்தில் ஹேக்கர்கள் அத்துமீறி நுழைந்தனர். அந்தப் பக்கத்தில் எலான் மஸ்க் பெயரில் ட்வீட்கள் இடம்பெற்றன. சில நிமிடங்களிலேயே அந்தப் பக்கம் மீட்கப்பட்டது.
» 5 மாநில தேர்தல்: பொதுக்கூட்டங்கள், பேரணிக்கான தடையை நீட்டித்த தேர்தல் ஆணையம்
» வேளாண் நிறுவனங்கள் ட்ரோன்கள் வாங்க ரூ.10 லட்சம் மானியம்: மத்திய அரசு அறிவிப்பு
அதேபோல் டிசம்பர் 12, 2021ல் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அதில் ஹேக்கர்கள் கிரிப்டோ கரன்ஸி முதலீடு செய்யக் கோரி ட்வீட் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago