உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்: 7 முன்னணி ஊடகங்களின் கருத்து கணிப்புகளில் தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

உத்தர பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று 7 முன்னணி ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 312 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில், உத்தர பிரதேசதேர்தல் தொடர்பாக 7 முன்னணிஊடகங்கள் கருத்து கணிப்புகளைநடத்தி முடிவுகளை வெளியிட்டுள் ளன. ஏபிபி நியூஸ், சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 223-235 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கூட்டணி 145-157 இடங்களைக் கைப்பற்றும். பகுஜன் சமாஜ் 8-16, காங்கிரஸ் 3-7 இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 230-235, சமாஜ்வாதி கூட்டணி 160-165, பகுஜன் சமாஜ் 2-5, காங்கிரஸ் 3-7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி, பி மார்க் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 252-272, சமாஜ்வாதி கூட்டணி 111-131, பகுஜன் சமாஜ் 8-16, காங்கிரஸ் 3-9 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நியூஸ் எக்ஸ், போல்ஸ்டாரட் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 235-245, சமாஜ்வாதி கூட்டணி 120-130, பகுஜன் சமாஜ் 13-16, காங்கிரஸ் 4-5 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ், வீட்டோ இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 227-254, சமாஜ்வாதி கூட்டணி 136-151, பகுஜன் சமாஜ் 8-14, காங்கிரஸ் 6-11 தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி, டிசைன்பாக்ஸ்டு நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 245-267, சமாஜ்வாதி கூட்டணி 125-148, பகுஜன் சமாஜ் 5-9, காங்கிரஸ் 3-7 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நியூஸ், ஜன் கி பாத் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 226-246, சமாஜ்வாதி கூட்டணி 144-160, பகுஜன் சமாஜ் 8-12, காங்கிரஸ் 0-1 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த 7 முன்னணி ஊடகங்களின் கருத்து கணிப்புகளை ஒப்பிடும் போது சராசரியாக பாஜக கூட்டணி 235-249, சமாஜ்வாதி கூட்டணி 137-147, பகுஜன் சமாஜ் 7-13, காங்கிரஸ் 3-7 தொகுதிகளை கைப்பற்றக்கூடும்.

உத்தர பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஏழு முன்னணி ஊடகங்களின் கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பு இருக்கிறது. எனினும் கடந்த தேர்தலைவிட பாஜகவுக்கு குறைந்த இடங்களேகிடைக்கும் என்று தெரிகிறது.

உ.பி. தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால், வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அந்த கட்சி மத்தியில் 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது. இந்தியாவின் இருதயமாகக் கருதப்படும் உத்தர பிரதேசத்தில் மிக அதிகபட்சமாக 80 மக்களவை தொகுதிகள் உள்ளன.

பாஜக தேர்தல் வியூகம்

உ.பி.யில் 3 அமைச்சர்கள் உட்பட 11 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அவர் களில் பெரும்பாலானோர் சமாஜ்வாதியில் இணைந்தனர். முதல்வர் ஆதித்யநாத் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிக்கப் படுவதாக அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். எனினும் பாஜகவின் தேர்தல் வியூகத்தால் அந்த கட்சி அறுதிப்பான்மையை எட்டிவிடும் என்று நம்பப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்