உ.பி. தேர்தலில் வாரிசுகளுக்கு வாய்ப்பு தேடும் குற்றப்பின்னணி அரசியல்வாதிகள்: புகார்களிலிருந்து தப்ப புதிய உத்தி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தேர்தல் சமயங்களில் அதிகமாகத் தலைதூக்கும் குற்றப்பின்னணி அரசியல்வாதிகளுக்கு பெயர்போனது உத்தரப்பிரதேசம். புகார்களிலிருந்து தப்ப புதிய உத்தியாக இந்தமுறை அவர்கள் தம் வாரிசுகளுக்கு வாய்ப்பு தேடுகின்றனர்.

ஒரு பொதுநல வழக்கில், கடந்த செப்டம்பர் 25, 2018 இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றப்பின்னணி வேட்பாளர்களுக்கான புதிய விதிமுறைகள் வெளியானது. இதை ஏற்ற மத்திய தேர்தல் ஆணையம், அதை கடந்த வருடம் அக்டோபரில் அமலாக்கியது.

இதனால், அவர்களை போட்டியிட வைக்கும் அரசியல் கட்சிகளுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்படி, குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் அறிவித்த 48 மணி நேரத்தில் அவர்களை பற்றிய விவரம் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும்.

இதில், அந்த வேட்பாளர் மீது உள்ள வழக்குகள் எத்தனை? அதன் விவரம் என்ன? ஆகியவை இடம் பெற வேண்டும். நீதிமன்றங்களில் இவ்வழக்குகளின் நிலை குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.

இதுபோன்ற கிரிமினல் வழக்குகள் கொண்டவரை வேட்பாளராக்க காரணம் என்ன? எனவும், அவை எதுவும் இல்லாதவரை போட்டியிட வைக்காதது ஏன்? என்றும் அவ்விளம்பரத்தில் விளக்கம் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஜய்சிங்

இந்த விளம்பரங்கள் வேட்பாளர் அறிவித்த நான்கு நாட்களில் வெளியாக வேண்டும். பிறகு வாக்கு தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன் மீண்டும் வெளியிடப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது.

இந்தமுறையும் உ.பி. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களில் குற்றப்பின்னணி கொண்டவர்கள் உள்ளனர். மிக அதிக எண்ணிக்கையில் பாஜகவின் 109 இல் 37 வேட்பாளர்கள் மீது குற்றவழக்குகள் பதிவாகி உள்ளன.

இதில், பாஜக ஆளும் உ.பி.யின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா மீது நான்கு வழக்குகள் பதிவாகி நடைபெறுகின்றன. முக்கிய எதிர்கட்சியான சமாஜ்வாதியின் வேட்பாளர்களில் 20 பேர் குற்றப்பின்னணி கொண்டவர்களாக தேர்வாகி உள்ளனர்.

இதனால், தம் குற்றப்பின்னணி வேட்பாளர்களில் அவர்களது அரசியல் கட்சிகள் புகார்களில் சிக்குகின்றன. இதை தவிர்க்க இந்தமுறை உபியின் குற்றப்பின்னணி அரசியல்வாதிகள் புதிய உத்தியை கையாளுகின்றனர்.

இதில், தமக்கு பதிலாக தமது வாரிசு அல்லது உறவினர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தேடுகின்றனர். முசாபர்நகர் கைரானா தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளராக அதன் எம்எல்ஏவான நாஹீத் ஹசன் அறிவிக்கப்பட்டார்.

நாஹீத் ஹசன்

நாஹீத்தை, மறுநாளே முசாபர்நகர் மதக்கலவரத்தில் சதித்திட்டம் தீட்டியதாக குண்டர் சட்டத்தில் கைது செய்தது உ.பி. அரசு. இதனால், தான் போட்டியிலிருந்து விலக முடிவு செய்த நாஹீத், இங்கு சுயேச்சையாக மனுச்செய்திருக்கும் தனது சகோதரி இக்ரா ஹசனை தனக்கு பதிலாக போட்டியிட வைக்க முயல்கிறார். ஆக்ராவின் குற்றப்பின்னணி கொண்ட சமாஜ்வாதியின் முக்கியத் தலைவரான அசோக் தீட்ஷித்.

இவர், பத்தேஹாபாத் தொகுதியில் தனது மகளான ருபாலி தீட்ஷித் போட்டியிட வாய்ப்பை பெற்றுள்ளார். அதிகமான குற்றவழக்குகளில் சிக்கி உபி சிறையிலிருந்து காஜீபூரின் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ, முக்தார் அன்சாரி.

இவர் தனது மகன் அப்பாஸ் அன்சாரியை தனது தொகுதியில் போட்டியிட தலைவர் மாயாவதியிடம் வலியுறுத்துகிறார். இவர்களை போல், குற்றப்பின்னணி கொண்ட முன்னாள் சுயேச்சை எம்எல்ஏக்களும் தம் வாரிசுகளை முன்னிறுத்துகின்றனர்.

முன்னாள் சுயேச்சையான மனு அன்சாரி தன் மகன் சிபக்கத்துல்லாவை முன்னிறுத்துகிறார். மூன்று முறை சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த விஜய்சிங், தற்போது சிறையில் உள்ளார்.

இவர் மீது தன்னை எதிர்த்து போட்டியிட்டு வென்ற பாஜகவின் பிரம்மதூத் துவேதி, எம்எல்ஏவின் கொலை வழக்கு முக்கியமாக உள்ளது. தற்போது விஜய்சிங், தனது சகோதரி மகன் கரண்சிங்கை பரூக்காபாத்தில் போட்டியிட வைக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்