புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராகுல் காந்தியையும் பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் எதிர்க்கட்சிகளை வழிநடத்தும் தலைவராக உருவெடுத்துள்ளதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் ராகுல் காந்தியை விடவும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கூடுதல் ஆதரவு உள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை இந்தியாவில் எதிர்க்கட்சியாக வழிநடத்துகிறார் என்று இந்தியா டுடேயின் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இதில் மம்தா பானர்ஜிக்கு 17 சதவீத ஆதரவும், கேஜ்ரிவாலுக்கு16 சதவீத ஆதரவும் உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இதற்கு அடுத்தபடியாக 11 சதவீத ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திரிணாமுல் மூத்த தலைவர் சஷி பஞ்சா கூறுகையில் ‘‘பாஜகவுக்கு கடும் சவாலாக இருந்தவர்களில் மம்தா பானர்ஜியும் ஒருவர். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உறுதியளித்த தலைவர்களில் அவரும் ஒருவர்.
» பனாஜி தொகுதி மறுப்பு: பாஜகவிலிருந்து விலகினார் மனோகர் பாரிக்கர் மகன்
» இந்தியாவுக்கு எதிரான செயல்பாடு: 35 யூடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு
உத்தரப் பிரதேசத்தைப் பார்த்தால், நாங்கள் அரசியல் ரீதியாகப் போட்டியிடவில்லை. அதுதான் முன்னுரிமை. சமாஜ்வாடி கட்சி மற்றும் அகிலேஷ் யாதவ் தேவைப்படும் போது அவருக்கு ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
அதேசமயம் சிறந்த பிரதமர் யார் இருப்பார் என்ற கேள்விக்கு மம்தா பானர்ஜியை விடவும் ராகுல் காந்தி முன்னேறியுள்ளார்.
பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட அடுத்த தகுதியான நபர் யார் என்ற கேள்விக்கு மோடிக்கு 52.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்டு மாதம் அவருக்கு நாடு முழுவதும் 24 சதவீதம் பேர் ஆதரவுதான் இருந்தது. அது இரட்டிப்பாக மாறி இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுவரை 10 சதவீதம் வரை இருந்த அவரது செல்வாக்கு தற்போதைய கருத்துக்கணிப்பில் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. யோகி ஆதித்யநாத்துக்கு 5.7 சதவீத ஆதரவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு 3.5 சதவீதம் ஆதரவு உள்ளது.
பிரதமர் பதவிக்கு பிரியங்கா பொருத்தமானவர் என்று வெறும் 3.3 சதவீதம் பேர்தான் கருத்து தெரிவித்துள்ளனர். மம்தாவுக்கு 2.6 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சோனியா, சரத்பவார், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்கு குறைந்த அளவு ஆதரவே கிடைத்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago