புதுடெல்லி: தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை 3 ஆண்டுகளுக்கு நீடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலத்தை மார்ச் 3-ம் தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு நீடிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
3 ஆண்டு கால நீடிப்புக்கான மொத்த செலவு சுமார் ரூ.43.68 கோடியாக இருக்கும். இந்த ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதால் நாட்டில் உள்ள தூய்மைப் பணி தொழிலாளர்களும் மனிதக் கழிவுகளை அகற்றுவோரும் பயன்பெறுவார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கணக்கெடுப்பின்படி மனிதக் கழிவுகளை அகற்றுவோர் எண்ணிக்கை 88,098 ஆக உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago