கரோனா 3-வது அலை மூன்று வாரங்களுக்கு நீடிக்கும்: எஸ்பிஐ ஆய்வறிக்கை

By செய்திப்பிரிவு

மும்பை: கோவிட் -19 தொற்றுநோயின் மூன்றாவது அலை குறித்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போதைய அலை அதிகபட்சமாக இன்னும் மூன்று வாரங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

கரோனா தொற்று அதிகம் கொண்ட முதல் 15 மாவட்டங்களில் புதிய தொற்று எண்ணிக்கை சரிய தொடங்கியதில் இருந்து நம்பிக்கை வந்துள்ளது.

மும்பை அதன் உச்சத்தை அடைந்தது ஜனவரி 7-ம் தேதி அன்று 20,971 கரோனா தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

புனே மற்றும் பெங்களூருவில் தினசரி புதிய எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகின்றன. மற்ற மாவட்டங்களும் கடுமையான நடவடிக்கைகளை செயல்படுத்தி, பரவலைக் கட்டுப்படுத்தினால், மும்பை உச்சத்திற்குப் பிறகு 2-3 வாரங்களுக்குள் நாட்டின் உச்சநிலை தொடலாம்.

கோவிட் 3-வது அலை, இந்தியாவில் நாளொன்றுக்கு 4 லட்சத்தை தாண்ட வாய்ப்பில்லை என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

10 முக்கிய நகரங்கள் உட்பட முதல் 15 மாவட்டங்களில் புதிய கரோனா தொற்று எண்ணிக்கை கடந்த டிசம்பர் இல் 67.9 ஆக இருந்து ஜனவரியில் 37.4 ஆக குறைந்துள்ளது.

கரோனா புதிய எண்ணிக்கை கிராமப்புற மாவட்டங்களின் ஒட்டுமொத்த பங்கு டிசம்பர் 2021 இல் 14.4% ஆக இருந்து 2022 ஜனவரியில் 32.6% ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், பிஹார், ஜம்மு காஷ்மீர், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த புதிய கரோனா எண்ணிக்கை கிராமப்புற பகுதிகளில் பதிவாகியுள்ளது.

தடுப்பூசி போடுவதில், ஆந்திரப் பிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் ஏற்கெனவே தகுதியுள்ள மக்களில் 70% க்கும் அதிகமானோருக்கு இரட்டை டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இன்னும் பின்தங்கியுள்ளன.

டெல்லி, மும்பை, வடக்கு 24 பர்கானாஸ் 3வது அலையின் உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால் நாடுதழுவிய அளவில் இன்னும் உச்சம் எட்டவில்லை.

மற்ற நாடுகளில், பொதுவாக வழக்குகள் அதிகரிக்கத் தொடங்கிய 54 நாட்களுக்குள் அலையின் உச்சம் வந்துவிட்டது. தற்போதைய உச்ச எண்ணிக்கை சராசரியாக முந்தைய உச்சத்தை விட 3.3 மடங்கு அதிகம்.

8முதல் 15 மாவட்டங்களில், இந்தியாவின் தினசரி தொற்று எண்ணிக்கை பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. டெல்லி, வடக்கு 24 பர்கானாஸ் மற்றும் மும்பை ஆகியவை உச்சத்தை எட்டியுள்ளன.

ஏப்ரல்-மே 2021 இல் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் போது, உச்சம் வெவ்வேறு தேதிகளில் வந்தது. தேசிய உச்சநிலைக்கு 26 நாட்களுக்கு முன்னதாக மும்பை 2வது அலையின் உச்சத்தை முதலில் அடைந்தது.

டெல்லி ஜனவரி 13 அன்று 3வது அலை உச்சத்தை அடைந்தது. அந்த நாளில் 28,000 தொற்று எண்ணிக்கை பதிவாகியுள்ளன. 2வது அலையின் போது, நாட்டின் உச்சநிலைக்கு 16 நாட்களுக்கு முன்பே டெல்லி அதன் உச்சத்தை எட்டியது.

மாவட்டங்களுக்கு முன்பாக மெட்ரோ நகரங்கள் உச்சத்தை எட்டும் போக்கு மூன்றாவது அலையிலும் தொடர்கிறது. உச்சம் என்பது ஒரு மாநிலம் அல்லது ஒரு நகரத்தில் உள்ள மோசமான கோவிட்-19 சூழ்நிலையைக் குறிக்கிறது.

அதன் பிறகு கரோனா தொற்று எண்ணிக்கை, நேர்மறை விகிதங்கள் போன்றவை குறையத் தொடங்குகின்றன. கோவிட் கட்டுப்பாடுகள், தடுப்பூசி போன்றவை மூலம் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்